search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    சியாட்டில் நகர சமூக விழாவில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி
    X

    சியாட்டில் நகர சமூக விழாவில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

    • இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்
    • இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம்.

    அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும் பல அம்சங்கள் இருப்பதால், மக்கள் பெருமளவில் உற்சாகமாக பங்கேற்பது வழக்கம்.

    நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, துப்பாக்கி ஏந்திய ஒருவன் திடீரென அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 4 ஆண்களும் 1 பெண்ணும் அடங்குவர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    "கிங் டோனட் கடைக்கு அருகில் உள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச்சூடு தொடங்கியது" என இச்சம்பவம் குறித்து சியாட்டில் நகர காவல்துறை தலைவர் அட்ரியன் டயஸ் கூறியிருக்கிறார்.

    இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

    "பல தவறான மனிதர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன," என இது குறித்து சம்பவ இடத்தில் பேசிய சியாட்டில் நகர மேயர் ப்ரூஸ் ஹேரல் தெரிவித்தார்.

    சியாட்டில் நகர காவல்துறையும், நகர நிர்வாகமும் அங்கு அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை கையாள முடியாமல் போராடி வருகின்றன.

    Next Story
    ×