search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி வீரர் பலி- வெளியான அதிர்ச்சி வீடியோ
    X

    கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி வீரர் பலி- வெளியான அதிர்ச்சி வீடியோ

    • மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார்.
    • கடந்த பிப்ரவரியில் இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார்.

    பெரு நாட்டின் சில்கா மாவட்டத்திற்கு உட்பட்ட ஹுவான்கேயோ பகுதியில் பெல்லாவிஸ்டா மற்றும் சோக்கா ஆகிய இரு உள்ளூர் அணிகள் பங்கேற்ற கால்பந்து போட்டி ஒன்று நடந்தது. 22 நிமிடங்கள் போட்டி நடந்ததில் 2-0 என்ற புள்ளி கணக்கில் பெல்லாவிஸ்டா முன்னிலையில் இருந்தது.

    இந்நிலையில், திடீரென மின்னல் தாக்கியதில், ஜோஸ் ஹியுகா டி லா குரூஸ் மிஜா (வயது 39) என்ற வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டு உடனடியாக கீழே விழுந்துள்ளார். அவர் தவிர, கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லேக்டா (வயது 40) என்பவருக்கும் தீவிர காயம் ஏற்பட்டது. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. குறைந்தது 8 பேர் மின்னல் தாக்கியதும் மைதானத்தில் சரிந்து விழுந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    குரூஸ் மிஜா மீது தீப்பற்றுவது போன்ற காட்சியும் அதில் காணப்பட்டது. இதில், அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, முன்பே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. இதனால், போட்டியும் கைவிடப்பட்டது.

    கையில் உலோக பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருந்துள்ளார் என்றும் அதனால், மின்னல் அவரை தாக்கியிருக்க கூடும் என தகவல் கூறுகிறது. கடந்த பிப்ரவரியில், இந்தோனேசிய கால்பந்து வீரர் செப்டன் ரஹஜா (வயது 30) என்பவர் மின்னல் தாக்கியதில் பலியானார். இதேபோன்று, காங்கோவில் 25 ஆண்டுகளுக்கு முன் மின்னல் தாக்கியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர்.



    Next Story
    ×