என் மலர்
உலகம்
அமெரிக்கர்களின் வேலையை பறிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.. சி.இ.ஓ. கேள்விக்கு மஸ்க் சொன்ன பதில்
- தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகிறது.
- தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.
பையன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழில்நுடபத்துறையில் வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் பலர் இதில் அடங்குவர்.
இந்நிலையில் வெளிநாட்டு தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பை பரிக்கிறார்களா என்றும் அமெரிக்காவின் வேலை சந்தையில் வெளிவந்தவர்களின் தாக்கம் குறித்தும் Replit நிறுவனத்தின் CEO அம்ஜத் மசாத் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
தொழில்நுட்பத் துறையில் தகுதிவாய்ந்த அமெரிக்கர்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
வெளிநாட்டினர் அனைத்தையும் எடுத்துக்கொண்டதால், தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகி வருகிறதா என்று மசாத் தனது பதிவில் சந்தேகம் தெரிவித்தார். இது உண்மை என்றால் ஆச்சர்யம் தான், ஏனெனில் தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், சிறந்த பொறியியல் திறமைகளுக்கு இங்கு நிரந்தர பற்றாக்குறை உள்ளது. இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடிப்படை காரணியாகும் என்று பதில் அளித்துள்ளார்.
There is a permanent shortage of excellent engineering talent. It is the fundamental limiting factor in Silicon Valley.
— Elon Musk (@elonmusk) December 25, 2024
சிலிகான் பள்ளத்தாக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் பிரதான இடமாகும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய மஸ்க்கின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அதிபராகும் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் மஸ்க் முக்கிய பங்காற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.