search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவா.. பாகிஸ்தானா.. பாவம் நியூ யார்க் மேயரே கன்பியூஸ் ஆயிட்டாரு - சுதந்திர தின பேரணி ஹைலைட்ஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இந்தியாவா.. பாகிஸ்தானா.. பாவம் நியூ யார்க் மேயரே கன்பியூஸ் ஆயிட்டாரு - சுதந்திர தின பேரணி ஹைலைட்ஸ்

    • இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது.
    • நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்'

    அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றிணைத்து நியூ யார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தை பேரணி நடத்தி பிரமாண்டமான முறையில் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுகளாக நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின பேரணி நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கஜ் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் குவீன்ஸ் 9 இந்தியா பேரணியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன் உரையாற்றிய நியூ யார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்தியா என்பதற்கு பதிலாக பாகிஸ்தான் என்று பலமுறை தவறுதலாக உச்சரித்தார். 'என்னை இந்த நிகழ்வுக்கு வர அனுமதித்ததற்கு மிகவும் நன்றி. உங்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். குவீனஸ் நகர் லிட்டில் பாகிஸ்தானில் இருந்து ப்ரூக்லின் நகர் லிட்டில் பாகிஸ்தான் வரை நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். நியூ யார்க் என்பது அமெரிக்காவின் நியூ டெல்லி.எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்' என்று தெரிவித்தார்.

    லிட்டில் இந்தியா என்று சொல்வதற்கு பதிலாக லிட்டில் பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புலப்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை லிட்டில் என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறே அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகள் லிட்டில் இந்தியா, லிட்டில் பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தனுக்கும் இடையில் வித்தியாசங்கள் நம்மிடையே பெரிதாக தெரிந்தாலும்,வெளிநாடுகளில் வாழும் மக்கள் இரு நாட்டவரையும் குழப்பிக்கொள்வது வழக்கம்.

    Next Story
    ×