search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியப் பொருளாதாரம் சற்று பலவீனம் அடையும் - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    இந்தியப் பொருளாதாரம் சற்று பலவீனம் அடையும் - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

    • கட்டணங்கள், வரிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் தாக்கம் இருக்கும்.
    • புதிய பாதிப்புகள் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் "சற்று பலவீனமாக" இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது

    அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நேற்று முன்தினம் [வெள்ளிக்கிழமை] நிருபர்கள் குழுவுடன் வருடாந்திர ஊடக சந்திப்பில் ஐஎம்எஃப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்.

    நாங்கள் முன்பு எதிர்பார்த்ததை விட அமெரிக்கா சற்று சிறப்பாக செயல்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் சற்று ஸ்தம்பித்துள்ளது, இந்தியா கொஞ்சம் பலவீனமாக உள்ளது. பிரேசில் உயா் பணவீக்க பாதிப்பை சந்தித்து வருகிறது. சீனா, பண வீக்கத்துக்கு எதிரான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. பொருள்களின் விலை குறைந்து வாங்கும் திறன் அதிகரித்திருப்பதால், உள்நாட்டு தேவை அதிகரித்து சவாலான சூழ்நிலை உருவாகியுள்ளது.

    2025 ஆம் ஆண்டு மிகவும் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டிருக்கும். குறிப்பாக பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அது இருக்கும்.

    உலகளாவிய அளவில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் அளவு மற்றும் பங்கைக் கருத்தில் கொண்டு புதிதாக அமைய உள்ள புதிய அரசின் கொள்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கட்டணங்கள், வரிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றினால் தாக்கம் இருக்கும்.

    குறைந்த வருவாய் நாடுகளின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில், புதிய பாதிப்புகள் எதிா்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    உலகளாவிய விநியோகச் சங்கிலி, நடுத்தர பொருளாதார நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக, ஆசிய பிராந்தியத்தில் தாக்கம் இருக்கும் என்று தெரிவித்தார்.

    ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்கும் டோனால்டு டிரம்ப், மற்ற நாடுகள் மீது வரி விதிப்பில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×