search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் உயிர்தப்பிய பரபரப்பு வீடியோவை பகிர்ந்த WHO இயக்குநர்
    X

    இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் உயிர்தப்பிய பரபரப்பு 'வீடியோ'வை பகிர்ந்த WHO இயக்குநர்

    • மனிதாபிமான நிலைமையை மதிப்பிட டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.
    • களத்தில் உள்ள எங்கள் சக ஐநா ஊழியர்களுக்கும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஆபத்தை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது.

    பாலஸ்தீனம் மீது நடத்திவரும் தாக்குதலை கண்டித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் செங்கடலில் வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கப்பல்களையும் சிறை பிடித்து வருகின்றனர். எனவே அமெரிக்கா உதவியுடன் ஹவுதிகள் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட ஐநா ஊழியர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், ஏமனில் சுகாதர மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் தலைமையிலான குழு ஏமன் சென்றது.பணிகளை முடித்து நேற்று சனாவில் இவர்கள் விமானம் ஏற இருந்தபோது அங்கு இஸ்ரேல் கண்டதை டிசம்பர் 26 ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது.

    எங்கள் விமானத்தின் பணியாளர் ஒருவர் இதில் காயமடைந்தார். மேலும் விமான நிலையத்தில் 2 பேர் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம், புறப்படும் இடம், ஓடுபாதை சேதமடைந்தன.

    நாங்கள் இருந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடமும் சேதமடைந்தது. நானும் என்னுடன் இருந்த ஐநா மற்றும் உலக சுகாதர அமைப்பு அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளோம். என்று இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில் தாக்குதல் நடந்தபோது தாங்கள் நூலிழையில் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோவை டெட்ரோஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதனுடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக எனக்கு ஏற்பட்ட துயரச் சூழலில் இருந்து நலம் பெற வாழ்த்திய எனது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.

    என்னைப் பாதுகாக்க முயன்றபோது தன்னலமற்றவர்களாக இருந்த சக ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன்.

    நாங்கள் மிகவும் ஆபத்தான தாக்குதலை எதிர்கொண்டோம், ஆனால் நானும் எனது சக ஐநா ஊழியர்களும் இப்போது பாதுகாப்பாக இருக்கிறோம். காயமடைந்த எங்கள் சக ஊழியரை மீட்டோம், அவர் உடல்நிலை நிலையாக உள்ளது.

    களத்தில் உள்ள எங்கள் சக ஐநா ஊழியர்களுக்கும், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஆபத்தை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கும் என் இதயம் இரங்குகிறது. நான் ஜெனீவாவுக்கு வீடு திரும்பும் வழியில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×