search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    விவாதத்தில் ஸ்தம்பித்து நின்ற ஜோ பைடன்.. டிரம்ப் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்- வீடியோ
    X

    விவாதத்தில் ஸ்தம்பித்து நின்ற ஜோ பைடன்.. டிரம்ப் கொடுத்த அல்டிமேட் ரியாக்ஷன்- வீடியோ

    • டிரம்புக்கு பதிலளித்த ஜோ பைடன், My son is not a sucker.. you are a sucker, you are a loser என்று குறிப்பிட்டார்
    • ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

    அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

    பொருளாதார பிரச்சனையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பட்டியலிட்டு ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டனர். தங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

    இந்த விவாதத்தில் பொருளாதாரம், வேலையின்மை, சட்டவிரோத குடியேற்றம், வெளியுறவுக் கொள்கை, கருக்கலைப்பு உரிமைகள், இஸ்ரேல் பாலஸ்தீன போர், கொரோனா தொற்றைக் கையாண்ட விதம் உள்ளிட்ட பலவற்றைக் குறித்தும் அவர்கள் விவாதகித்தனர். பைடன் சீனாவிடம் பணம் பெற்றுக்கொண்டு அமேரிக்காவில் பற்றாக்குறையை உண்டாக்குகிறார் என்று கூறும் அளவுக்கு டிரம்ப் சென்றார். மேலும் ஜோ பைடனின் மகன் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்ட டிரம்புக்கு, My son is not a sucker.. you are sucker, you are a loser என்று டிரம்ப் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளதை குறிப்பிட்டு ஜோ பைடன் பதிலளித்தார்.

    ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்ட அவர்களில் கோல்ப் விளையாட்டில் யார் சிறந்தவர் என்றும் விவாதித்துக்கொண்டனர். 81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின.

    மேலும் நிகழ்ச்சிகளில் திடீரென அசைவுகள் ஏதுமின்றி பைடன் ஸ்தம்பித்து விடுவதும் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், இன்று டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

    அவர் என்ன செய்கிறார் என்று டிரம்ப் உற்று நோக்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த மொத்த விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.

    Next Story
    ×