என் மலர்
உலகம்

பிரதமராக மோடி பதவியேற்பு: பில் கேட்ஸ் வாழ்த்து
- டெல்லி ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
- இதில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார்.
வாஷிங்டன்:
பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.
இதற்கிடையே, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பில் கேட்ஸ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். சுகாதாரம், விவசாயம், பெண்கள் தலைமையிலான மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம் போன்ற துறைகளில் உலகளாவிய முன்னேற்றத்திற்கான புதுமைக்கான ஆதாரமாக இந்தியாவின் நிலையை நீங்கள் பலப்படுத்தி உள்ளீர்கள். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு தொடர்ச்சியான கூட்டாண்மையை எதிர்நோக்குகிறோம் என பதிவிட்டுள்ளார்.






