search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அணு ஆயுத கூடத்தில் வட கொரிய அதிபர்.. உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு - டிரம்ப் சொல்வது என்ன?
    X

    அணு ஆயுத கூடத்தில் வட கொரிய அதிபர்.. உற்பத்தியை அதிகரிக்க உத்தரவு - டிரம்ப் சொல்வது என்ன?

    • இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுள்ளார்.
    • ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது.

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றது முதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டின் அணு ஆயுத உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அமெரிக்காவிடம் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

    கிம் ஜாங் உன் அணு ஆயுத கூடத்தில் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டின் அணுசக்தி போர்த் திறனை குறித்து உலக நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. முன்னதாக கடந்த 2019 இல் அதிபராக இருந்த சமயத்தில் டிரம்ப் வடகொரியா சென்று கிம் ஜாங் உன் - ஐ சந்தித்தார். வடகொரியாவுக்கு ஒரு அமெரிக்க அதிபர் செல்வது அதுவே முதல் முறை.

    ஆனால் அதன்பின் அமைந்த ஜோ பைடன் அரசுடன் வடகொரியா நல்லுறவைப் பேணவில்லை. மாறாக மேற்கு நாடுகளைப் பகைத்து உக்ரைனுடன் போரிடும் ரஷியாவுடன் வட கொரியா கைகோர்த்தது. ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. உக்ரைன் உடனான போரில் வடகொரிய வீரர்களை ரஷியா பயன்படுத்தியது.

    இதற்கிடையே அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து வட கொரியா தனது திறனை பறைசாற்றி வருகிறது. கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது.

    மேலும் கடந்த செப்டம்பரில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி மேற்கு நாடுகளை மிரள வைத்தது. இந்நிலையில் நேற்று அணு ஆயுத உற்பத்தி மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாட்டின் அணுசக்தி கேடயத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுளளார் என்று கூறப்படுகிறது.

    எதிரி நாடான தென் கொரியா மீது எந்நேரமும் வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின் ஒரு பேட்டியில், கிம் ஜாங் உன் புத்திசாலி என்றும் வடகொரியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக டிரம்ப் பேசியிருந்தார்.

    தென் கொரியாவின் அனுமானப்படி 2018 ஆம் ஆண்டிலேயே வட கொரியா 20 முதல் 60 அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் வடகொரியாவிடம் 100 க்கும் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

    Next Story
    ×