search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    26/11 பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
    X

    26/11 பயங்கரவாத தாக்குதல் குற்றவாளியை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

    • மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 166 பேர் சுட்டுக்கொலை செய்தனர்.
    • தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் சம்பவத்தின்போது சுட்டுக்கொலை செய்தனர்.

    மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட கனடா தொழில் அதிபரான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம்தேதி பாகிஸ்தானில இருந்து கடல் வழியாக மும்பையில் நுழைந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களைக் குறி வைத்துத் தாக்குதலை நடத்தினர்.

    பல இடங்களில் நான்கு நாட்கள் வரை நீடித்த இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் 166 கொலை செய்யப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012-ல் துாக்கிலிடப்பட்டான்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட கனடாவை சேர்ந்த தஹாவூர் ராணாவை இந்தியா தேடிவந்தது. இதற்கிடையே ராணாவை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராணாவை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவளித்தது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றம் ஒப்பந்தம்படி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

    Next Story
    ×