search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஷேக் ஹசீனா மாளிகையில் உள்ள பொருட்களை அள்ளிச்சென்ற போராட்டக்காரர்கள்

    • ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறினார்.
    • இந்தியா வந்துள்ள அவர் இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் இன்று ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் புகுந்தனர். இதற்கு முன்னதாக ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்தார்.

    ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.

    பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.

    இதற்கிடையே வங்காளதேச சுதந்திரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.

    Next Story
    ×