என் மலர்
உலகம்
ஜெர்சி தீவில் குண்டு வெடிப்பு- 3 பேர் பலி
- கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்.
- குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இங்கிலாந்து, பிரான்ஸ் இடையே உள்ளது ஜெர்சி தீவு உள்ளது. இந்த தீவின் தலைநகர் செயின்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அந்த கட்டிடத்தில் வசித்த 20 முதல் 30 பேரை அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றினார்கள். மேலும் 12 பேரை காணவில்லை. அவர்களை மீட்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தபோது அந்த வழியாக நடந்து சென்ற 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.