என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
வங்காளதேச ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்கு நாட்டின் கை?.. ஷேக் ஹசீனா சொன்னது என்ன?
- சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
- 'மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்'
வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேச சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடத்தப் போராட்டம் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற குரலாக மாறியது.
14 ஆண்டுகால ஆட்சியை இரண்டே மாதங்களில் தூக்கியெறிய வைத்தது எது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.போராட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஜமாத்- இ- இஸ்லாமியின் பங்கு கவனிக்கத்தக்கது. மேலும் ஹசீனாவுடனான இந்தியாவின் நெருக்கம், சீனா உள்ளிட்ட நாடுகளை உறுத்துதலாக இருந்து வருவதையும் பொருத்திப் பார்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
மே 2024 இல் அவர் அளித்த அந்த பேட்டியில், வங்காள தேசத்தில் தங்களது நாட்டின் விமான படைத்தளத்தை அமைக்க அனுமதி அளித்தால் தன்னை மீண்டும் மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்' என்று ஹசீனா தெரிவித்திருந்தார். ஆனால் எந்த புதிய விமான தளமும் வங்காள தேசத்தில் அமைக்கப்படவில்லை. தற்போது ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஹசீனா வெள்ளை இன நபர் என்று குறிப்பிட்டது, மேற்கு நாடுகளை குறிக்கிறது என்றும் எனவே இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்கு நாடு ஒன்றின் சதி இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த 2009 முதல் ஆட்சியில் உள்ள ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.