search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    எல்லையில் வடகொரியா ராணுவ வீரர்கள்: கூட்டாளிகளிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் கேட்கும் ஜெலன்ஸ்கி
    X

    எல்லையில் வடகொரியா ராணுவ வீரர்கள்: கூட்டாளிகளிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் கேட்கும் ஜெலன்ஸ்கி

    • வடகொரியா ராணுவம் உக்ரைனில் தாக்குதலை தொடங்கும் வரை காத்துக்கொண்டிருப்பீர்களா?
    • நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை வழங்கவும். அது அவசியமானது.

    உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இந்த சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தபோது உக்ரைன் தப்பிக்காது என்ற கருத்து இருந்தது.

    ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியால் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக சண்டையிட்டு வருகிறது. இந்த சண்டையில் ரஷியாவுக்கு மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடைபெற்று வரும் நிலையில் வடகொரிய ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட 10 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. இதை ஆதாரத்துடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ளார்.

    இந்த நிலையில வடகொரிய துருப்புகளுக்கு எதிராக நீண்டு தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதல் அவசியம் என ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் ஆதரவு அளித்து வரும் நாடுகளை, "வடகொரியா ராணுவம் உக்ரைனில் தாக்குதலை தொடங்கும் வரை காத்துக்கொண்டிருப்பீர்களா?" எனக்குற்றம் சாட்டினார். அத்துடன் அதற்குப் பதிலாக நீண்ட தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை வழங்கவும். அது அவசியமானது.

    மேலும், "ரஷியா அதன் எல்லையில் உள்ள முகாம்கள் அனைத்திலும் வட கொரியா வீரர்களை குவித்து வைத்திருப்பதை நாங்கள் காண்கிறோம். நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் இருந்தால், நாம் தடுப்பு நடவடிக்கையாக தாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×