என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
தீவிரமாகும் லெபனான்-இஸ்ரேல் சண்டை: மத்திய கிழக்கு பகுதிக்கு மேலும் படைகளை அனுப்பும் அமெரிக்கா
- ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது என இஸ்ரேல் தெரிவித்தது.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் கூறியுள்ளது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. தெற்கு லெபானானில் ஹிஸ்புல்லா ஆயுத குவியல் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அதன்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் அரசு தெரிவித்துள்ளது. இதனால் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. தெற்கு லெபனானில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது
இதையடுத்து லெபனானில் 2 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்தது. கிழக்கு, தெற்கு மற்றும் பெய்ரூட் நகரின் தென்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மூடப்படுகின்றன.
இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதிக்கு மேலும் படைகளை அனுப்ப உள்ளோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பென்டகன் அதிகாரி பாட் ரைடர் கூறுகையில், மத்திய கிழக்கில் அதிகரித்த பதற்றத்தாலும், மிகுந்த எச்சரிக்கை காரணமாகவும், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் நமது படைகளை அதிகரிக்க சிறிய எண்ணிக்கையிலான கூடுதல் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்புகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக அதுதொடர்பான விவரங்களை வெளியிடவில்லை என தெரிவித்தார்.