என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
கென்யாவின் புதிய அதிபராக தேர்வானார் வில்லியம் ரூடோ
- ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
- இந்த தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வானார்.
நைரோபி:
ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரைலா ஒடிங்காவின் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
ஒடிங்காவின் பிரச்சாரத்தில் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் அறிவிப்பு தாமதமானது.
இந்நிலையில், கென்யா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட துணை அதிபர் வில்லியம் ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 50.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.
அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூடோ தனது உரையில், தேர்தலை மேற்பார்வையிட்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. அனைவருக்கும் அதிபராக இருக்க விரும்புகிறேன். எங்களுக்கு எதிராக பல காரியங்களைச் செய்தவர்களுக்கு பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்ல விரும்புகிறேன். பழிவாங்கும் எண்ணம் இருக்காது. திரும்பிப் பார்க்க எங்களிடம் ஆடம்பரமில்லை என தெரிவித்தார்.
55 வயதான ரூடோ அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.