search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பனிப் புயலால் 90 பேர் பலி - பல மாநில மக்கள் அவதி
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பனிப் புயலால் 90 பேர் பலி - பல மாநில மக்கள் அவதி

    • தீவிர பனிப்பொழிவும், பனிப்புயலும் மக்களின் வாழ்வை முடக்கி உள்ளது
    • குடிநீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் குடிநீருக்கு தவிக்கின்றனர்

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பருவநிலையில் தோன்றிய தீவிர வானிலை மாற்றங்களினால் அமெரிக்காவில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பல மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவுடன் பனிப்புயலும் தாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.

    டென்னிசி மாநிலத்தில் 25 பேரும், ஒரேகான் மாநிலத்தில் 16 பேரும் கடும் பனிப்பொழிவால் உயிரிழந்ததையடுத்து அங்கெல்லாம் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


    இது மட்டுமின்றி இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிபி, வாஷிங்டன், கென்டுக்கி, விஸ்கான்சின், நியூயார்க், நியூ ஜெர்சி உள்ளிட்ட 8 மாநிலங்களில் உயிரிழப்பு நடந்துள்ளது.

    கடந்த புதன்கிழமையன்று ஒரேகான் மாநில போர்ட்லேண்டு பகுதியில் 3 பேர் சென்று கொண்டிருந்த காரின் மீது ஒரு மின்சார லைன் அறுந்து விழுந்தது. இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒரு குழந்தையை தவிர அனைவரும் உயிரிழந்தனர்.

    பல மாநிலங்களில் மின்சார தடை ஏற்பட்டு நாடு முழுவதும் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர்.

    சியாட்டில் பகுதியில் வீடுகள் இல்லாத 5 பேர், கடந்த 4 நாட்களில் உயிரிழந்தனர்.

    மிசிசிபி மாநிலத்தில் அவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    டென்னிசி மாநிலத்தில் பல இடங்களில் குடிநீர் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் காய்ச்சிய குடிநீரையே உணவு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. பல இடங்களில் உணவகங்கள் குடிநீர் இல்லாததால் மூடப்பட்டன.

    நியூயார்க் மாநில விளையாட்டு அரங்கங்களில் பெருமளவு பனி நிறைந்துள்ளதால், அவற்றை அகற்ற விளையாட்டு ரசிகர்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

    இன்னும் சில நாட்களுக்கு பனிப்பொழிவு தொடரலாம் என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×