search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்.. அலைச்சருகில் 2 ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா
    X

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ்.. அலைச்சருகில் 2 ஆம் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா

    • தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
    • இன்று நடந்த போட்டியில் தொடக்கத்தில் பன்வார் பன்வார் முன்னிலையில் இருந்தார்

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்தார்.

    4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.

    இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை கடந்து 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார் பல்ராஜ் பன்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பன்வார் முன்னிலையில் இருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் மொனாக்கோ வீரர் குவென்டின் அடோஃனெல்லி [Quentin Antognelli] அவரை முந்தியதால் இரண்டாம் இடத்திற்கு பன்வார் சென்றார். இதனைத்தொடர்ந்தே மொனாக்கோ மற்றும் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×