search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 government buses were captured"

    • பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுவதாக புகார் கூறி வருகின்றனர்.
    • பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்ல முடியாமல் இப்பகுதி குடியிருப்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    பேரூர்:

    பேரூர் அருகே தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறுவாணி மெயின்ரோட்டில், மரக்கடை பஸ் ஸ்டாப் பகுதி உள்ளது. இந்த பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்பதில்லை என தெரிகிறது.

    குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுவதாக புகார் கூறி வருகின்றனர்.

    இதனால், குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்ல முடியாமல் இப்பகுதி குடியிருப்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

    இப்பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி, ஏற்கனவே, பேரூர் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் மூலமாக பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    கடந்த பல மாதங்களுக்கு முன்பே, கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எவ்வித நடவ–டிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், இன்று காலை மரக்கடை பஸ் ஸ்டாப் பிரிவு-சிறுவாணி மெயின் ரோட்டில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறுவாணி மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் வந்த 10 அரசு பஸ்களை சிறைபிடித்து போ–ராட்டத்தில் ஈடுபட்ட–னர்.

    இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் இறுதியில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் மறியலை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், சிறுவாணி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×