search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2024 TNPL"

    • இறுதிப் போட்டி சென்னையில் நடக்கிறது.
    • கோவை-திருப்பூர் அணிகள் நாளை மோதல்.

    திண்டுக்கல்:

    8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அங்கு 9 ஆட்டங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்டமாக 8 போட்டி நெல்லையில் 3-வது கட்டமாக 6 ஆட்டங்களும் நடத்தப்பட்டது.

    4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேர்த்து 5 போட்டிகள் திண்டுக்கல்லில் நேற்றுடன் முடிவடைந்தது.

    லீக் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை 4 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்றன.

    நிகர ரன்ரேட் அடிப்படையில் திருப்பூர் 2-வது இடத்தையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது இடத்தையும் , திண்டுக்கல் 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    நெல்லை ராயல் கிங்ஸ் (7 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6), மதுரை பாந்தர்ஸ் (5) சேலம் ஸ்பார் டன்ஸ் (2) ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.

    இன்று ஓய்வு நாளாகும். பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.

    திண்டுக்கல்லில் நாளை இரவு 7.15 மணிக்கு நடை பெறும் முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர்-1) முதல் இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) விளையாடும்.

    கோவை அணி 'லீக்' ஆட்டத்தில் திருப்பூரை 1 ரன்னில் வீழ்த்தி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலியைர்-2) விளையாடும்.

    நாளை மறுநாள் (31-ந் தேதி) திண்டுக்கல்லில் நடை பெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நான்காம் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 'குவாலிபையர்-1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.

    குவாலிபையர்-2 ஆட் டம் ஆகஸ்ட் 2-ந்தேதியும், இறுதிப் போட்டி 4-ந்தேதியும் சென்னையில் நடக்கிறது.

    • திண்டுக்கல் அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.
    • மதுரை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    சென்னை:

    8-வது தமிழ்நாடு பிரீமி யர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி (டி.என்.பி.எல்.) தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியின் லீக் ஆட்டங்கள் சேலம், கோவை, நெல்லை ஆகிய இடங்களில் நடந்தன.

    4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோது கின்றன.

    திண்டுக்கல் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2: தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்யும்.

    அந்தஅணியில் அஸ்வின், ஷிவம்சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    மதுரை அணி 5 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மதுரை அணியில் ஹரி நிசாந்த், கவுசிக், சதுர்வேத், முருகன் அஸ்வின், மணி கண்டன், அஜய் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    ×