என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A mechanic"
- பொள்ளாச்சி-கோவை ரோட்டில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தார்.
- அபிலாஷை ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி பல்லடம் ரோடு வெங்கிட்டு வீதியை சேர்ந்தவர் அஸ்வத் (வயது23).
இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மாதம் 17-ந் தேதி அஸ்வத் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் விளையாடுவதற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டபோது, அவரது நண்பர் தனது மோட்டார் சைக்கிளை அஸ்வத்திடம் கொடுத்து, நீ எடுத்து சென்று விட்டு நாளை கொண்டு வா என கொடுத்து அனுப்பி வைத்தார்.
இதையடுத்து அஸ்வத் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார். அதனை வீட்டில் உள்ள போர்டிகோவில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். நேற்று பொள்ளாச்சி கிழக்கு நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பொள்ளாச்சி-கோவை ரோட்டில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது அவர் கோவையை சேர்ந்த அபிலாஷ்(28) என்பதும், மெக்கானிக்காக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும் இவர் தான் அஸ்வத்தின் வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றதும், பின்னர் அதனை கோவையில் உள்ள ஒருவரிடம் விற்று விட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அபிலாசை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முடிவில் அவரை கைது செய்து, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
- படுகாயம் அடைந்த என்ஜினீயரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் 32 வயது சிவில் என்ஜினீயர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக்கின் வீட்டில் கட்டுமான பணிகள் மேற்கொண்டார்.
அப்போது என்ஜினீயருக்கு மெக்கானிக்கின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் மெக்கானிக்கிற்கு தெரியவந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் இளம்பெண் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்றார். இது மெக்கானிக்கிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று என்ஜினீயர் புளியம்பட்டி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மெக்கானிக் தனது நண்பருடன் சேர்ந்து என்ஜினீயரை இரும்பு கம்பியால் தாக்கினார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த என்ஜினீயரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு என்ஜினீயருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்