search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A teenager was killed"

    • தண்டவாளத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இறந்த நபர் யார் போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மாவேலிபாளையம் ரெயில் நிலையத்துக்கும்-சங்ககிரி ரெயில் நிலையத்துக்கும் இடையே தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தாரா? என தெரியவில்லை.

    இறந்த நபர் புளூ கலர் அரை பனியன். புளூ கலர் பேண்ட் அணிந்து இருந்தார். வலது கணுக்காலுக்கு மேல் ஒரு கருப்பு மச்சமும், வலது முழங்காலுக்கு கீழே பழைய தழும்பு உள்ளது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செந்தில்குமார் மோட்டார் சைக்கிளில் எல்.அன்டு. டி. பைபாஸ் ரோட்டில் சென்றார்.
    • இந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.

    கோவை,

    மதுக்கரை அருகே உள்ள பாலத்துறையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). இவர் இன்று காலை 8.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் எல்.அன்டு. டி. பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக சேலத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டு இருந்தது. லாரியை பாஸ்கரன் என்பவர் ஓட்டிச் சென்றார். திடீரென இந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற மற்றொரு லாரி மீது மோதியது.

    பின்னர் மோட்டார் சைக்கிளில் சென்ற செந்தில்குமார் மீது மோதியது.

    இதில் சம்பவஇடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். தொடர்ந்து லாரி நிற்காமல் அந்த பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டின் அருகே உள்ள கடையின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இருந்த செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 29). இவர் அவிநாசி பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். திருமணம் ஆன இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இவர் தனது ஓட்டலுக்கு சப்ளையர் தேவைப்படு வதால், இது சம்பந்தமாக ஈரோட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் வேலை முடித்து அவினா சியை நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    பெருந்துறை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி நுழைவு பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்க ம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×