என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Action to improve quality"
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், முதியோர்களுக்கு மருந்து பெட்டகமும் வழங்கினார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட இடையம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 34-வது சிறப்பு கொரோனா தடுப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ம. அன்பழகன் வரவேற்றார்.
இதில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், முதியோர்களுக்கு மருந்து பெட்டகமும் வழங்கிபேசினார். ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி ஜோலார்பேட்டை தொகுதியில் மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நகர செயலாளர் ம.அன்பழகன் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தியும், கூடுதலாக நகர ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் மாரிமுத்து, துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் செந்தில், நகர கழக செயலாளர் எஸ் ராஜேந்திரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சி. கவிதா தண்டபாணி, மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் பழனி நகர மன்ற துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார் தாசன், நகராட்சி பொறியாளர் கோபு ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி அரசு டாக்டர் சுமன் சுகாதார ஆய்வாளர் கோபி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்