search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adhir Ranjan Chowdhury"

    • மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மம்தா பானர்ஜியுடன் கூட்டணி தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
    • ஐந்து முறை வெற்றி பெற்ற நிலையில் தற்போது யூசுப் பதானிடம் தோல்வியடைந்தார்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. முன்னாள் எம்.பி.யான இவர் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் தோல்வியடைந்தார்.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால் ஆதர் ரஞ்சன் சவுத்ரியின் ராஜினாமா ஏற்கப்பட்டதா? உள்ளிட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

    முர்ஷிதாபாத் பஹரம்பூர் மக்களவை தொகுதியில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஐந்து முறை எம்.பி.யாக தேர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் மாநிலங்களை எம்.பி. சிதம்பரம் தற்செயலாக தலைமை செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் 35 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முடிவை எடுத்துள்ளார்.

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது. சில விசயங்களில் மல்லிகார்ஜூன கார்கே கருத்தில் வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார்.
    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டன.

    பஹரம்புர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நிறுத்தப்பட்டார். இவர் பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராகவும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் கட்சி தலைவராகவும் உள்ளார். இவரை எதிர்த்து மம்தா பானர்ஜி முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதானை நிறுத்தினார்.

    இதில் யூசுப் பதான் வெற்றிபெறும் நிலையில் உள்ளார். யூசுப் பதான் 5 லட்சத்து 22 ஆயிரத்து 564 வாக்குகள் பெற்றுள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 4 லட்சத்து 36 ஆயிரத்து 798 வாக்குகள் பெற்றுள்ளார். யூசுப் பதான் 85 ஆயிரத்து 766 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இதனால் வெற்றி அருகில் உள்ளார்.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக மம்தாவுக்கும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையில் வார்த்தை போர் நடைபெற்றது. மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சித்தார்.

    தன்னை கடுமையாக விமர்சித்த மூத்த அரசியல்வாதியை ஒரு கிரிக்கெட் வீரரை நிறுத்தி மம்தா பானர்ஜி தோற்கடித்துள்ளார் என கூறப்படுகிறது.

    • திரிணாமுல் கட்சிக்கு வாக்களிப்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது என்றார்.
    • ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பா.ஜ.க.வின் பி டீம் என திரிணாமுல் குற்றம்சாட்டியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    இந்த முறை 400 இடங்கள் கிடைக்காது. ஏற்கனவே பிரதமர் மோடியின் கையிலிருந்து 100 இடங்கள் நழுவிவிட்டன.

    காங்கிரசையும், சி.பி.ஐ(எம்)யையும் வெற்றிபெறச் செய்வது அவசியம்.

    காங்கிரசும், சி.பி.எம்.மும் வெற்றிபெறவில்லை என்றால் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது என்பது பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது போன்றது.

    எனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பதைவிட பாஜகவுக்கு வாக்களிப்பது நல்லது.

    ஆகவே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதீர்கள். காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வின் குரலாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கிறார். அவர் பா.ஜ.க.வின் பி டீம் என குற்றம்சாட்டியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன.
    • வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளுக்கான வேட்பளர்களை வெளியிட்டார்.

    மம்தாவின் இந்த அதிரடியான அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டார்.

    இந்த நிலையில் மம்தா பானர்ஜியுடன் இன்னும் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கூட்டணிக்கான எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்தே உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் திரிணாமுல் காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் இருந்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ.யை பிரதமர் மோடி வீட்டுக்கு அனுப்புவார் என்று மம்தா பானர்ஜி பயப்படுகிறார். எனவே பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளார். என் மீது அதிருப்தி அடைய வேண்டாம். நான் பா.ஜனதாவுக்கு எதிரான கூட்டணியில் நிற்கவில்லை என்பதுதான் அந்த செய்தியாகும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்திரி விமர்சனம் செய்துள்ளார்.

    • இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.
    • இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 இடங்களில் 2 இடங்களை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க மம்தா பானர்ஜி முடிவு செய்தார். ஆனால், காங்கிரஸ் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இரு கட்சிகளும் இருக்கின்றன. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்து வந்தது. கடந்த மாதம் இறுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளும் தயாராக இருக்கின்றன என தகவல் வெளியானது.

    ஆனால், தனது முடிவில் மம்தா உறுதியாக உள்ளார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இந்த நிலையில்தான் நேற்று 42 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இதன் மூலம் காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் மேற்கு வங்காள மாநிலத்தில் கூட்டணி இல்லை என முடிவானது.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் "மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு செய்து கொள்ள விருப்பமாக உள்ளோம் என தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

    ஜெய்ராம் ரமேஷ்

    பேச்சுவார்த்தை மூலம் இறுதி கட்டத்தை எட்டி ஒப்பந்தம் மேற்கொள்ளும முறையை காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது. தனிப்பட்ட முறையில் ஒருதலைபட்சமாக அறிவிப்பு ஏதும் வெளியிடுவதில்லை. பா.ஜனதாவுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஒன்றாக போட்டியிடுவதைத்தான் காங்கிரஸ் கட்சி எப்போதும் விரும்புகிறது" என்றார்.

    மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில் "இந்தியாவின் எந்த ஒரு அரசியல் கட்சியும் தன்னைப் போன்ற தலைவரை நம்பக்கூடாது என்பதை மம்தா பானர்ஜி நிரூபித்துள்ளார்.

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்தால், பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இருக்கமாட்டார் என மம்தா பானர்ஜி பயப்படுகிறார். இந்தியா கூட்டணியில் இருந்து அவர் பிரிந்து தனியாக போட்டியிடுவதன் மூலம், என்னுடைய மனவருத்தத்துடன் இருக்க வேண்டாம், நான் பா.ஜனதாவுக்கு எதராக போட்டியிடும் அணியில் இல்லை என்ன செய்தியை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்" என்றார்.

    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.
    • பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.

    அந்த வரிசையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இதோடு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

     


    மேற்கு வங்காள மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசப் பதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதே தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முறையும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடலாம் என்ற நிலையில், பிரபலம் ஒருவரை வேட்பாளராக களமிறங்க செய்யும் முடிவில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிரிக்கெட் வீரர் யூசப் பதானை இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

    பஹரம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இது போன்ற முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுப்பதோடு பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதையே காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இந்தியா கூட்டணியில் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை எதிர்க்கவே காங்கிரஸ் கட்சி நினைத்து வந்துள்ளது," என்று தெரிவித்தார்.

    • மணிப்பூர் முதல் மும்பை வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • இன்று மேற்கு வங்காளத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில், கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று கொல்கத்தா மாநிலத்தில் அவரது நடைபயணம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி மேற்கு வங்காள மாநிலத்தின் கதிஹார் என்ற இடத்தில் நடைபயணம் மேற்கொண்டு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கல்வீச்சில் கார் கண்ணாடி சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. லேசான தாக்குதல் சம்பவம் என்பதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

    இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில் "கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தியிருக்கலாம். காவல்துறையினர் இந்த சம்பவத்தை புறக்கணித்துள்ளனர். போலீசாரின் புறக்கணிப்பால் ஏராளமான விசயங்கள் நடந்திருக்கலாம். இது சிறு சம்பவம்தான்" என்றார்.

    கொல்கத்தா மாநிலத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது குறித்து தன்னிடம் ஏதும் தெரிவிக்கவில்லை என மம்தா பானர்ஜி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். மக்களவை தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி விலகியுள்ளார்.

    இதனால் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வார்த்தை போரில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரசுடன் உறவை முறிக்க காரணமானவர் குறித்து திரிணமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினார்.
    • அவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை நிருபர்கள் சந்திப்பில் மூன்று முறை குறிப்பிட்டார்.

    கொல்கத்தா:

    மத்தியில் 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியது.

    சுமார் 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடந்துள்ள நிலையில் அந்த கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜியும், பஞ்சாப்பில் 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என முதல் மந்திரி பகவந்த் மானும் அறிவித்தனர்.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரசின் மாநிலங்களவை எம்.பி. இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தியா கூட்டணிக்கு 2 முக்கிய எதிரிகள் உள்ளனர். ஆதிர் ரஞ்சன் பா.ஜ.க.வின் மொழியில் பேசுகிறார். காங்கிரசுடன் உறவை முறிக்க இவரே காரணம் என தெரிவித்தார்.

    மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பெயரை 3 முறை குறிப்பிட்டு தனது கோபத்தையும் வெளிப்படுத்தினார்.

    • மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
    • திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை.

    கொல்கத்தா:

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தையின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் முர்ஷிதா பாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசும் போது, மாவட்டத்தில் மட்டுமல்ல 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட வேண்டும்.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட தயாராக உள்ளது என்றார். அவரது இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பா.ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.


    முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹரங்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை. எங்கள் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறார்கள்.

    நான் இந்த நிலைக்கு எளிதாக வந்துவிடவில்லை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டும், தேர்தலில் வெற்றி பெற்றே வந்துள்ளேன். எப்படி போட்டியிடுவது, எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்கு தெரியும் என்றார்.

    • காங்கிரஸ்க்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் பிடிவாதம்.
    • தனித்து போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் யோசித்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கிறது. பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்க இந்தியா கூட்டாணி உருவாகியுள்ளது. இதில் 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி இடஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ்க்கு இரண்டு இடங்கள்தான் தர முடியும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியடைந்துள்ளனர். தனியாக நிற்கவும் தயங்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் குணால் கோஷ் கூறியதாவது:-

    கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் மீது காங்கிரஸ் மாநில அமைப்பு தாக்குதல் நடத்துகிறது. அதேவேளையில் பா.ஜனதாவுக்கு ஆக்சிஜன் கொடுத்து வருகிறது. இது வேலை செய்யாது. நாங்கள் அனைத்து இடங்களிலும், அதாவது 42 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம்.

    தொகுதி பங்கீட்டின்போது காங்கிரஸ் கள நிலவரும் என்ன? என்பதை ஆராய்ந்து பேச வேண்டும். அவர்கள் அரசியல் நெருக்கடியை செய்து கொண்டிருக்கிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜி இறுதி முடிவு எடுப்பார்.

    இவ்வாறு குணால் கோஷ் தெரிவித்தார்.

    அதற்கு பதிலடியாக எம்.பி.யும், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-

    எனக்கு யாரையும் பற்றி கவலையில்லை. எங்களுடைய தலைவர்கள் ஏற்கனவே பேசிவிட்டார்கள். நான் இங்கு போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக வந்துள்ளேன். போட்டியிட்டு வெற்றி பெற எங்களுக்குத் தெரியும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    • மம்தா பானர்ஜி, தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்யிடுவோம் என்ற சொல்லி வருகிறார்.
    • கூட்டணி இல்லை என்றால், பிரதமர் மோடி மிகவும் மகிழ்சசியடைவார்.

    மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. பா.ஜனதா கட்சி அதற்கு ஆயத்தமாகி வருகிறது. அதேபோல் பா.ஜனதாவை எதிர்க்க இந்தியா கூட்டணி தங்களை தயார் படுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்படும் எனத் தெரிகிறது.

    இது சரி செய்யப்பட்டால் இந்தியா கூட்டணி பிரதமர் மோடிக்கு வலுவான எதிர்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேற்கு வங்காளத்தில் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு இந்தியா கூட்டணிதான் போட்டியிடும் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு இடங்கள்தால் வழங்குவோம் என மம்தா பானர்ஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அதிர்ச்சியளித்துள்ளது. மேலும், மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் மக்களவை தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை ஆத்திரமடையச் செய்துள்ளது.

    இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது-

    யாரை பிச்சைக்கேட்டார்கள் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் பிச்சை கேட்கவில்லை. மம்தா பானர்ஜி, தேர்தலில் இந்தியா கூட்டணியாக போட்யிடுவோம் என்ற சொல்லி வருகிறார். ஆனால் எங்களுக்கு இரண்டு தொகுதிகள் எனத் தெரிவித்துள்ளார். நாங்கள் அவரிடம் கருணை கேட்கவில்லை. நாங்கள் எங்களுடைய சொந்த பலத்தில் போட்டியிட முடியும்.

    கூட்டணி இல்லை என்றால், நாட்டில் யார் அதிகம் மகிழ்ச்சியடைவார்?. கூட்டணி இல்லை என்றால், பிரதமர் மோடி மிகவும் மகிழ்சசியடைவார். மம்தா பானர்ஜி செய்வது மோடிக்கு சேவை செய்வதாகும்.

    இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    • மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார்.
    • 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி யது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியது.

    17 அமர்வுகளாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு 21 மசோதாக்களை நிறைவேற்றியது. டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்ட மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் மசோதா, காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசுகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்க் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது என்றார். இதை தொடர்ந்து பாராளுமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மனீஷ்திவாரி எம்.பி. பேசுகையில், அரசிய லமைப்பு சட்டத்தின் 105(1) பிரிவின்படி ஒவ்வொரு எம்.பி.க்கும் பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ் பெண்டு செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோத மானது என்றார்.

    சிவசேனா எம்.பி. பிரி யங்கா சதுர்வேதி பேசுகையில், எதிர்க்கட்சியினர் பேசுவதால் பிரதமர் மோடியும் ஒட்டு மொத்த அமைச்சரவையும் எரிச்சலடைகிறார்கள். எங்கள் கூட்டணியின் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்றார்.

    காங்கிரஸ் தலைமைக் கொறடா சுரேஷ் பேசும் போது, எம்.பி.யாக இருந்த வரை சஸ்பெண்டு செய்ததன் மூலமாக பாராளுமன்ற ஜன நாயக அமைப்பை கொன்றுவிட்டார்கள் என்றார். மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசும்போது, 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    பின்னர் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மதியம் 12.30 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

    ×