என் மலர்
நீங்கள் தேடியது "Adi Diravida Paraiyar Community"
- திருச்செந்தூர் நா.முத்தையாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- ஏப்ரல் 16-ந்தேதி திருச்செந்தூர் ஆதி திராவிடர் பறையர் சமுதாய மக்கள் சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நா.முத்தையாபுரம் கிராமத்தில் ஆதிதிராவிட பறையர் சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு மற்றும் பராமரிப்பு சங்க தலைவர் முரசுதமிழப்பன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கடந்த 1962-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைத்திட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க கோரி ஏப்ரல் 16-ந்தேதி திருச்செந்தூர் ஆதி திராவிடர் பறையர் சமுதாய மக்கள் சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கோவில் முதுநிலை பணியாளர்கள் சங்க முன்னாள் தலைவர் தோப்பூர் சேகர், அகில இந்திய தலித் மக்கள் பாதுகாப்பு பேரவை நிறுவனர் சின்னத்துரை பாண்டியன், எவிடன்ஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கென்னடி ஆகியோர் கலந்துகொண்டனர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வக்கீல் அரசூர் ராஜ் குமார், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி பன்னீர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் அமிர்த லிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஞான குமார் நன்றி கூறினார்.






