என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "al-Qaida"
- ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படை 2011, மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றது.
- ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவித்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 3,000 கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்-கொய்தா இயக்க தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடியது.
10 ஆண்டு தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் 2011, மே 2-ம் தேதி சுட்டுக்கொன்றனர்.
ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பை குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹம்சா பின்லேடன் 2019-ம் ஆண்டில் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தி மிர்ரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் உயிருடன் தான் உள்ளான் என ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் எதிர்ப்பு ராணுவ அமைப்பான என்.எம்.எப். என்ற அமைப்பு தெரிவிக்கிறது.
2021 ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி முடிவுக்கு வந்து தலிபான்கள் கைப்பற்றியபோது பல்வேறு பயங்கரவாத குழுக்களுக்கான பயிற்சி மையம் அமைத்து 450 பாகிஸ்தானியர்கள் ஹம்சா பின்லேடனுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றனர்.
அவனது கட்டளையின் கீழ், அல்-கொய்தா மீண்டும் ஒருங்கிணைந்து வரும் காலங்களில் மேற்கத்திய நாடுகள் மீது தாக்குதல்களுக்கு தயாராகி வருகிறது.
ஒசாமா பின்லேடனுக்கு பிறகு அல்-கொய்தா விவகாரங்களை கவனித்து வரும் அய்மன் அல்-ஜவாஹிரியுடன் ஹம்சா பின்லேடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் நம்பப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார்.
- அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார்.
நியூயார்க்:
வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.
கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.
கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்டது.
இதற்கிடையே, பயங்கரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா.சபை இறங்கியது. தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்தனர். மேலும் அவருடன் கடத்தப்பட்ட 4 பேரையும் அல் கொய்தாவினர் விடுவித்துள்ளனர் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்.
- இந்தத் தகவலை அதிபர் ஜோ பைடன் இன்று உறுதிப்படுத்தினார்.
வாஷிங்டன்:
அல்-கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடனோடு நெருங்கிய தொடர்புடையவர் அய்மான் அல்-ஜவாரி. அவரை அதிமுக்கிய பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்திருந்த அமெரிக்க அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து தேடி வந்தது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்க தலைவர் அய்மான் அல்-ஜவாரி கொல்லப்பட்டார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், அல்-கொய்தா இயக்க தலைவர் அல்-ஜவாரி கொல்லப்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அல்-கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாரி காபூலில் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு காலம் சென்றாலும், நீங்கள் எங்கு மறைந்திருந்தாலும், எங்கள் மக்களுக்கு நீங்கள் அச்சுறுத்தலாக இருந்தால், அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும்.
இரட்டைக் கோபுர தாக்குதலை என்றுமே மறக்க மாட்டோம். அமெரிக்காவை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு என தெரிவித்தார்.
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் இந்திய கிளையான அகியுஸ் (இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா), ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளையான ஐ.எஸ்.ஐ.எஸ்-கே (ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன்) அமைப்புகளை மத்திய அரசு அதிரடியாக தடை செய்து உள்ளது.
மிகக் கடுமையான சட்டமாக கருதப்படுகிற சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்