search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி உள்பட 5 பேர் விடுவிப்பு
    X

    ஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி உள்பட 5 பேர் விடுவிப்பு

    • கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார்.
    • அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார்.

    நியூயார்க்:

    வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார்.

    கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. சார்பில் சபியுல் அனம் அனுப்பப்பட்டார். அப்போது அதன் தலைநகரமான ஏடனில் வைத்து பயங்கரவாதிகளால் சுபியுல் கடத்தப்பட்டார். அவருடன் இருந்த மேலும் 4 அதிகாரிகளும் கடத்தப்பட்டனர்.

    கடத்தல் சம்பவத்திற்கு உள்ளூர் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தா பொறுப்பெற்றது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றும் வெளியிட்டு மீட்பு தொகையாக ரூ.248 கோடி கேட்டது.

    இதற்கிடையே, பயங்கரவாதிகளிடம் மாட்டிக்கொண்ட அதிகாரிகளை மீட்கும் பணியில் ஐ.நா.சபை இறங்கியது. தூதர்களை நேரில் அனுப்பி பேச்சுவார்த்தை மேற்கொண்டது.

    இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அல்-கொய்தா பயங்கரவாதிகள் உடல்நலனை காரணம் காட்டி சுபியுல் அனமை விடுவித்தனர். மேலும் அவருடன் கடத்தப்பட்ட 4 பேரையும் அல் கொய்தாவினர் விடுவித்துள்ளனர் என ஐ.நா.சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×