என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Alcohol Prohibition"
- மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
- ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அமைந்துள்ளது. இன்று காலை சிலை முன்பு திடீரென கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் கையில் மதுவை ஒழிப்போம் என்ற வாசகங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு பதாகை ஒன்றை ஏந்தி முட்டி போட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் ரெயில் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்திய போது மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் நெல்லை மாவட்டம் குறிச்சிக்குளம் பகுதியை சேர்ந்த யோவான் என்பதும், இவர் ரெயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில் பணி புரிவதும் தெரியவந்துள்ளது.
மது போதையால் பல குடும்பங்கள் சீரழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.
- தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
- மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது'' என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும், "உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்" என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து, நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியும். ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து மது உள்ளே வந்து விடும்; கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற புளித்துப் போன காரணங்களைக் கூறியே மதுவிலக்கை தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார் ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை.
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும், கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில் காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.
அரசு அதன் வருவாய்க்காகவும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு, உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை என்று உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்?
- மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது?
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை; 90 மிலி மதுப்புட்டிகளை அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். 90 மிலி மது கிடைக்காததால் பலரும் அதிக அளவு மதுவை வாங்கி, பகிர்ந்து கொள்ள கூட்டாளி கிடைக்காமல் எவ்வளவு நேரம் காத்துக்கிடக்கிறார்கள்? என்பன போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வினாக்களுக்கு விடை காண்பதற்காக தமிழக அரசு அதன் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது என்று அமைச்சர் ஒருவரே கூறுவதைத் தான் பொறுப்புள்ள குடிமகனாக தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்? மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது? என்பன உள்ளிட்ட விடை காணப்பட வேண்டிய வினாக்கள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை செயல்படுத்துவது தான் நன்மை. அதற்கு தயாரா? என்பதை தமிழக அரசும், மதுவிலக்குத்துறை அமைச்சரும் தெளிவு படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக அரசு பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள், விபத்துகளில் சிக்கியோர் என பலருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
- மதுவை ருசித்து அதற்கு அடிமையாகும் ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருப்பதை தமிழக அரசு கவனிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது
நெல்லை:
காந்தியவாதி செங்கோட்டை விவேகானந்தன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நலத்திட்டங்கள்
தமிழக அரசு பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் விவசாயிகள், தொழில் முனைவோர், வயதானோர், பட்டதாரிகள், விளையாட்டு வீரர்கள், விபத்துகளில் சிக்கியோர் என பலருக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
புதிய சாலைகள், பாலங்கள், கல்லூரிகள், சுகாதார வளாகம், நான்குவழி, விரைவு சாலைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனைகள் என நாட்டின் வளர்ச்சிக்கு கவனம் செலுத்துவதை போல் நாட்டில் மதுவினால் ஏற்படும் தீமைகள், உயிர் பலிகள், ஆபத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வருத்தம் அளிக்கிறது
மதுவை ருசித்து அதற்கு அடிமையாகும் ஒரு புதிய தலைமுறை தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருப்பதை தமிழக அரசு கவனிக்க தவறுவது வருத்தம் அளிக்கிறது. காந்தியவாதிகள் கேட்பதெல்லாம் பூரண மதுவிலக்கு கொள்கை அமலாவது மட்டுமே. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது.
ஆனால் அனைத்தையும் மறந்து மக்கள் அரசை நிந்திப்பது இந்த மது கடைகளால் சாதாரண மக்களும், சான்றோர் பெருமக்களும் வருந்துகின்ற பொது விஷயம் மதுக்கடைகளை வீதிகள் தோறும் திறந்து வைப்பதே. இதன் மூலம் குற்றங்கள் அதிகரிக்கிறது. எனவே அரசு மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
பூரண மது விலக்கு
மது கடைகளால் வருவாய் வருகிறது என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மதுக்கடைகளை மூடினால் இன்னும் வருவாய் அதிகரிக்கும். எப்படி என்றால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். சாவுகளின் எண்ணிக்கை குறையும் எனவே தமிழக அரசு உடனே பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
இவர் அவர் கூறினார்.
பேட்டியின் போது ஓய்வுபெற்ற தாசில்தார் முத்துசாமி, திருமாறன் டாக்டர் ஏகலைவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிவகங்கை ஆதி திராவிடர் நல விடுதியில் மாணவிகளுடன் மதுவிலக்கு ஆணையர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
- தூய்மைப் பணியாளர்களிடம் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட அலுவலக சிறு கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகள், ஈராண்டு ஆய்வு மற்றும் கள ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, கல்வித்துறை, ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்ப டுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியவை குறித்தும், நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மேற்கொ ள்ளப்பட்டு வரும் நட வடிக்கைகள் குறித்தும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட துறைகள் ரீதியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், இதுவரை மேற்கொண்ட திட்டப்பணிகள், மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதி நிலைகள் ஆகியவை தொடர்பாக எடுத்துரைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முழு மையாக நிறைவேற்றவும், தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்றுத் தருவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் தற்போது முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொண்டு திட்டங்களின் பயன்களை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடையச் செய்ய வேண்டும் என அலுவ லர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையார் மதிவாணன் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், காளையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காஞ்சிரங்கால் ஊராட்சியிலுள்ள உயிர் எரிவாயு ஆலை, இயற்கை எரிவாயு மின் இயக்கி நிலையத்தில் ஆய்வு செய்து, மின் உற்பத்தித்திறன் மற்றும் தூய்மைப் பணியா ளர்களிடம் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்திட அறிவுறுத்தி னார்.
கலெக்டர் அலுவலக வளாக அருகிலுள்ள சிவகங்கை படிப்பக வட்ட மையத்தில், போட்டித் தேர்விற்கான பல்வேறு வகையான புத்தகங்கள் இருப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து சிவகங்கை ஆதிதி ராவிடர் நல மாணவியர் விடுதியில், ஆதிதிராவிடர் பள்ளி, கல்லூரி விடுதி மாணவியர்களுடன் விழிப்புணர்வு கலந்து ரையாடல் நிகழ்ச்சியில் ஆணையர் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் வானதி, கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), ரத்தினவேல் (தேவகோட்டை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி மற்றும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை போன்ற துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்