என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "anticipation"
- அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது.
- ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கும் இவரது உறவினர் அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக அன்பரசன் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் முத்துக்குமரன் மனைவி ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ரூபி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் அன்பரசன், இந்துமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
- விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலுாரை அடுத்துள்ள அரகண்டநல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்படுகிறது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து செல்கின்றனர். அந்த அளவுக்கு மாநில அளவில் பிரசித்தி பெற்ற ஒழுங்குமுறை விற்பனை கூடமாக இது விளங்குகிறது. இங்கு வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி அரசு பல்வேறு வசதிகள் செய்து வருகின்றது. அதன்படி விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி விணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. முன்னதாக இங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மற்றும் செங்கல் காரைகள் புதிய கட்டிடத்தின் முன்பாக கொட்டப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களை புதிய கட்டிடத்தில் வைக்க முடியாமல் வெளியிலேயே வைத்துள்ளனர். மேலும், இதனை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தானியங்களை பாதுகாக்க முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த கட்டிட காரைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இங்கு இருக்கிறது. இதனை அகற்ற விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கட்டிடத்தின் எதிரில் இருக்கும் பழைய கட்டிடத்தின் காரைகளை அகற்றி விவசாயிகளின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதிய ரெயில்களை இயக்க தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர்
2018 முதல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த மதுரை-நெல்லை இரட்டை ரெயில் பாதைப் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் அனைத்து ரெயில்களும் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ரெயில் நிலையங்களில் முன் கூட்டி வந்த ரெயில்கள் எதிரே வரும் ரெயிலுக்காக காத்திருந்த நிலை மாறியுள்ளது. மேலும், பயண நேரமும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் மற்றும் ரெயில் பயணிகள் கூடுதலான ரெயில்களை இந்த வழித் தடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக வடமாநி லங்களில் இருந்து மதுரை வரை வரும் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்கவும், வடமாநி லங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களை மதுரை சந்திப்பு ரெயில் நிலையம் வரை நீட்டிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மற்றும் திருச்சி கோட்டங்களில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை வரை கூடுதலான ரெயில்களை இயக்க வேண்டும். நீண்ட நாட்களாக சிறப்பு ரெயில்களாக இயங்கும் ரெயில்களை நிரந்தரமாக இயக்கவும், தென் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் கூடுதல் ரெயில்கள் இயக்கவும் பயணிகள் எதிர்பார்க்கி ன்றனர்.
சிறப்பு ரெயிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம்
(அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது) சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் வரும் மேட்டுப்பாளையம் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். கொல்லம்-விருதுநகர்-மானாமதுரை-ராமேசுவரம் இடையே புதிய ரெயில்களை இயக்க வேண்டும்.
புதிய வந்தே பாரத் ரெயில்கள்
சென்னை-கன்னியாகுமரி வரையும், நெல்லையில் இருந்து -பெங்களூரு வரையும் செல்லும் வகையில் புதிய வந்தே பாரத் ரெயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கும் ரெயில்வே அமைச்ச கத்திற்கும் ரெயில் பயணிகள் மற்றும் தென் மாவட்ட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் -மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை நெல்லை வரையும், மதுரை-ஜெய்ப்பூர் வரை இயங்கும் பிகானிர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரையும், சண்டிகர்-மதுரை வரை இயங்கும் சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரையும், மதுரை-சென்னை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லையில் இருந்து புறப்படும் வகையிலும் நீட்டிக்க வேண்டும்.
விழுப்புரம்-மதுரை பயணிகள் ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். சேலம்-கரூர்-திருச்சி வரை இயங்கும் பயணிகள் ரெயிலை திருச்செந்தூர் வரை நீட்டிக்க வேண்டும். போடி-மதுரை வரை இயங்கும் பயணிகள் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
கோவை-மதுரை வரை இயங்கும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.
மானாமதுரை-மன்னார்குடி வரை செல்லும் டெமு ரெயிலை விருதுநகர் சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். விருதுநகர் -மானாமதுரை வழியாக காரைக்குடி, திருச்சி வரை செல்லும் டெமு ரெயிலை பயணிகள் ரெயிலாக மாற்றி செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.
செங்கோட்டை-மதுரைக்கு அதிகாலை நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு புதிய இணைப்பு ரெயில் விட வேண்டும். கேரள மாநிலம் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வரை இயங்கும் சிறப்பு ரெயிலை தினசரி ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும்.
குருவாயூர்-புனலூர் வரை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட திருப்பதி-கொல்லம் விரைவு ரெயிலை உடனே இயக்க வேண்டும்.
2018-ல் அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரெயிலையும் காலதாமதமின்றி இயக்க வேண்டும். தாம்பரம்-திருவாரூர்-காரைக்குடி வழியாக நெல்லை சந்திப்பு வரை அறிவிக்கப்பட்ட விரைவு ரெயிலை காலதாமதமின்றி இயக்க வேண்டும்.
நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு செல்லும் விரைவு ரெயிலை மதுரையில் இருந்து புறப்பட செய்ய வேண்டும். நெல்லையில் இருந்து பிளாஸ்பூர் வரை செல்லும் விரைவு ரெயிலை மதுரை சந்திப்பிலிருந்து இயக்க வேண்டும்.
அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கேரளா வழியாக கன்னியாகுமரி வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலை மதுரையில் இருந்து இயக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்று தென் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- செஞ்சி பஸ் நிலையம் விரிவாக்க பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டது.
- தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர்.
விழுப்புரம்:
செஞ்சி பஸ் நிலையம் ரூ 6.74 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்டு பழைய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்போது பஸ் நிலையத்தை திண்டிவனம் சாலையில் உள்ள தற்காலிக இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையத்தில் பழைய கட்டிடம் இடிக்கும் பணி ஒருபுறம் நடக்க மறுபுறத்தில் அனைத்து பஸ்களும் வந்து சென்றுகொண்டிருந்தன.
இந்நிலையில் ஏற்கனவே செஞ்சி கடைவீதியில் கழிவுநீர் கால்வாய் விரிவுபடுத்தி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பணி தற்போது பஸ் நிலையத்தில் இருந்து கூட்டு ரோடு வரை தொடங்கியுள்ளதால் கூட்ரோடு பகுதியில் சிறு பாலம் அமைக்க சாலை தடுக்கப்பட்டதாலும் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் வரமுடியாமல் தற்காலிக பஸ் நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. இருந்தும் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக பஸ் நிறுத்தத்திற்கு செல்லாமல் செஞ்சி கூட்டு சாலையிலேயே பயணிகளை இறக்கி ஏற்றி சென்று கொண்டுள்ளனர். இதனால் கூட்ரோடு பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது.
எனவே செஞ்சி கூட்டுச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப் படுவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் சென்னை செல்லும் பஸ்கள் உட்பட அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்தை பயன்படுத்த வேண்டும் என கடுமையாக அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்