என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Archery World Cup"
- தீபிகா இறுதிப்போட்டியில் தோல்வியடைவது இது 5-வது முறையாகும்.
- உலகக் கோப்பையில் இதுவரை 5 சில்வர் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
மெக்சிகோவின் ட்லாக்ஸ்காலாவில் நேற்று 2024ஆம் ஆண்டிற்கான வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டிக்கு சீன வீராங்கனை லி ஜியாமனும், இந்திய ரிகர்வ் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரியும் முன்னேறினர். இதில் லி ஜியாமனிடம் 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் தீபிகா குமாரி.
முதல் முறையாக உலகக் கோப்பையில் கலந்து கொண்ட சீன வீராங்கனை லி ஜியாமனு தங்கப்பதக்கத்தை வென்று அசத்தி உள்ளார்.
தீபிகா இறுதிப்போட்டியில் தோல்வியடைவது 5-வது முறையாகும். ஒன்பது உலகக் கோப்பையில் பங்கேற்ற இவர், இதுவரை 5 சில்வர் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்தியா சார்பில் உலகக் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை டோலா பானர்ஜி ஆவார். 2007-ம் ஆண்டு நடந்த போட்டியில் இவர் தங்கப்பதக்கம் வென்றார்.
தீபிகா குமாரி 3 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையில் கலந்து கொண்டுள்ளார். தாய்மை காரணமாக அவர் ஓய்வில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
- சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது
- காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்
சீனாவில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 தங்கப் பதக்கங்களை வென்று அசதியுள்ளனர்.
ஜோதி சுரேகா, அதிதி ஸ்வாமி, பர்ணீத் கௌர் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி இத்தாலியை 236-225 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.
அபிஷேக் வர்மா, பிரயன்ஷ், பிரதமேஷ் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணி நெதர்லாந்தினை 238-231 என்ற புள்ளிகளில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.
கலப்பு அணி பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி எஸ்டோனியாவை 158-157 புள்ளிகளில் வென்று தங்கம் வென்றனர்.
நடப்பு ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜோதி சுரேகாவுக்கு இது இரட்டை தங்கப் பதக்கமாகும். மேலும் தனிநபர் பிரிவில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்ள இருக்கிறார். .
கலப்பு பிரிவில் தனி நபர் பதக்கத்திற்கான போட்டியில் பிரயன்ஷ் உள்ளார். ரீகர்வ் பதக்க சுற்றுகள் நாளை நடைபெறுகின்றன. இதில் 2 தங்கங்களை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்க மோதலில் ஒலிம்பிக் சாம்பியனான தென் கொரியாவை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் தீபிகா குமாரி பெண்கள் ரிகர்வ் பிரிவின் அரையிறுதியில் தென் கொரியாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
- இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியன் வென்றால்.
- 19 வயதான பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம்.
உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜோங்ஹோ- ஓ யோயூன் இணையை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த போட்டியில் ஓஜஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி 156-155 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. கடந்த மாதம் துருக்கியில் நடந்த உலகக் கோப்பை (நிலை 1) போட்டியிலும் இந்திய இணை தங்கம் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நெதர்லாந்தின் மைக் கிளாசருக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
19 வயதான பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
- இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
- சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது.
உலகக் கோப்பை வில்வித்தை 2ம் நிலைக்கான போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்-ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, இத்தாலியின் எலிசா ரோனிர்-எலியா பிரிக்னென் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 157-157 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து நடந்த சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட இந்தியாவின் திரஜ் பொம்மதேவரா-சிம்ரன்ஜீத் கவுர் ஜோடி 2-6 என்ற கணக்கில் இந்தோனேஷியா இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.
- சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
- 26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா வென்னம்-ஒஜாஸ் தியோதால் இணை 159-154 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் சென் யி ஹூன்- சென் ஷிக் லுன் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 149-146 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சாரா லோபெஸ்சை (கொலம்பியா) வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
26 வயதான ஜோதி சுரேகா இந்த போட்டியில் வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
- இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
- அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 1) போட்டி துருக்கியில் உள்ள அண்டால்யா நகரில் நடந்து வருகிறது. இதில் ரிகர்வ் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தீரஜ், தருண்தீப் ராய் ஆகியோர் அடங்கிய இந்திய ஆண்கள் அணி நேரடியாக 2-வது சுற்றில் களம் கண்டது.
இதில் இந்திய அணி டைபிரேக்கர் முடிவில் 5-4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து கால்இறுதியில் 6-2 என்ற கணக்கில் சீன தைபேயையும், அரைஇறுதியில் 6-2 என்ற கணக்கில் நெதர்லாந்தையும் எளிதில் தோற்கடித்த இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரிகர்வ் அணிகள் பிரிவில் இந்திய அணி கடந்த 9 ஆண்டுகளில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தங்கப்பதக்கத்திற்கான இறுதிசுற்றில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது. இதே போல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.
- கலப்பு இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஜோடிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
- கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.
பாரீஸ்:
உலக கோப்பை வில்வித்தை போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற கலப்பு அணிகள் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தங்கம் வென்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 152-149 என்ற புள்ளி கணக்கில் பிரான்சின் ஜீன் பிலிப் போல்ச்- சோபி டாட்மோன்ட் ஜோடியை வீழ்த்திய இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. உலக கோப்பை வில்வித்தை கலப்பு அணி பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை.
இறுதிப் போட்டியில் தீபிகா குமாரி ஜெர்மனியைச் சேர்ந்த மிட்செல் க்ரோப்பனை எதிர்கொண்டார். முதல் செட்டில் 30-க்கு 29 புள்ளிகள் பெற்று தீபிகா குமார் 2-0 என முன்னிலைப் பெற்றார். 2-வது செட் டிராவில் முடிந்ததால் இருவரும் தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். 3-வது சுற்றை ஜெர்மனி வீராங்கனை மிட்செல் கைப்பற்றினார். இதனால் ஸ்கோர் 3-3 என சமநிலையில் இருந்தது.
ஆனால், 4-வது மற்றும் 5-வது செட்டில் அபாரமாக அம்பு எய்திய தீபிகா குமாரி முறையே 29 புள்ளிகள், 27 புள்ளிகள் பெற்றார். ஜெர்மனி வீராங்கனையால் இரண்டு செட்டிலும் தலா 26 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. இதனால் 7-3 என தீபிகா குமாரி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வெற்றார்.
2011, 2012, 2013 மற்றும் 2015 உலகக்கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய தீபிகா குமாரியால் தங்கம் வெல்ல முடியவில்லை. தற்போது முதன்முறையாக தங்கம் வென்றுள்ளார்.
ஆனால் இறுதிப்போட்டியில் டென்மார்க் வீரர் ஹன்செனிடம் சறுக்கினார். ஹன்சன் 140 புள்ளிகள் சேர்க்க, அபிஷேக் வர்மாவால் 123 புள்ளிகள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தியடைந்தார்.
கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா உடன் இணைந்து விளையாடினார். இதில் இந்த ஜோடி 147-140 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.
முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி பெண்களுக்கான தனிப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். பெண்களுக்கான அணிப்பிரிவில் அட்டானு தாஸ் உடன் இணைந்து வெண்கலப் பதக்கத்திற்கும் போட்டியிடுகிறார். இதனால் குமாரி இரண்டு பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்