search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armstrong murder case"

    • ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங்க கொலைக்கான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து காவல் ஆணையர் கூறியதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். 90% விசாரணை முடிவடைந்துவிட்டது. கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம்.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம், முக்கிய நபர்கள் குறித்து காவல்துறை விரைவில் தெரிவிக்கும்.

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவர்களின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 4 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், பூந்தமல்லி கிளை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் கைதான மணிவண்ணன் உள்பட 4 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கோபி, குமரன், ராஜேஷ் ஆகியோரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட மணிவண்ணன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    உத்தரவை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும், பூந்தமல்லி கிளை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    • மணிவண்ணனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவலில் இருக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
    • மணிவண்ணன் என்பவர் ஆர்காடு சுரேஷ்- யின் உறவினர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    சென்னை:

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சொமோட்டோ உடை அணிந்து வந்து வெட்டிய கும்பலை ஒருங்கிணைத்த மணிவண்ணனுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் மணிவண்ணனை தற்போது 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    மேலும் மணிவண்ணன் என்பவர் ஆர்காடு சுரேஷ்- யின் உறவினர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    மணிவண்ணன், "சந்தோஷ், ராமு, கோகுல், விஜய், சிவசக்தி ஆகியோர் சொமேட்டோ ஊழியர்கள் போல உடை அணிய வைத்து நோட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக கொலை செய்ததில் முக்கிய பங்காற்றியவர்"

    மேலும் "கூலிப்படையாக செயல்பட்ட தனது நண்பர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுப்பதாக கூறி அழைத்து வந்து கொலையில் மணிவண்ணன் ஈடுப்படுத்தியுள்ளார்" என்பதும் தெரியவந்துள்ளது.

    • கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
    • கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை மிரட்டலை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி மற்றும் உறவினர்கள் வசிக்கும் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

    • ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கொலை சதியின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளை ஏற்கனவே போலீசார் 2 முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். இதன் அடிப்படையில் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு பலர் சிக்கி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொன்னை பாலு உள்பட மேலும் 5 பேரை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதன்படி பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவா ஆகிய 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    இந்த விசாரணையின் போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் பல தகவல்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆயுதங்கள் மற்றும் பண உதவி செய்தவர்களையும் போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக போலீஸ் காவலில் எடுப்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக உள்ள வக்கீல் உள்பட 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்கள் என்கிற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே போலீசார் 3 பேரையும் தேடுகிறார்கள்.

    பொன்னை பாலு உள்பட 5 பேரை காவலில் எடுக்கும் போது இவர்கள் 3 பேர் பற்றியும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • காவல்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.
    • தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ள தமிழக காவல்துறை இதுவரை 18 பேரை கைது செய்துள்ளது.

    இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முகிலன், அப்பு, விஜய் ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    படுகொலை சம்பந்தமாக நாட்டு வெடிகுண்டு சப்ளை செய்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைதான மூவரையும் சேர்த்தால், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

    • மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரவுடி சம்போ செந்திலை 10 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸார் சம்போ செந்தில் போலீசாரிடம் சிக்காமல் தப்பித்து எப்படி? என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள சம்போ செந்திலின் கூட்டாளிகள் அவருடன் பேசுவதற்காக பிரத்யேக செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும், கூட்டாளியின் பிரத்யேக செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் சம்போ செந்தில், அவர்களின் சொந்த மொபைல் மூலம் விரும்பும் நபருக்கு போன் செய்து லவுடு ஸ்பீக்கரில் பேசுவதும் தெரிய வந்தது.

    இப்படி பேசினால் சம்போ செந்தில் யாருடன் தொடர்பு கொள்கிறார் என்ற விவரங்களை பெற இயலாது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    வி.பி.என். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிகிராம், இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே தனது கூட்டாளிகளுடன் சம்போ செந்தில் பேசி வருவதும் விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.

    தினந்தோறும் மதிய வேலைக்கு பிறகே கூட்டாளிகளுடன் பேசி வரும் சம்போ செந்தில் வெளிநாட்டில் இருந்து கொண்டு அந்த நாட்டின் நேரத்திற்கு ஏற்றாற்போல் சம்போ செந்தில் பேசுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராம், டெலிகிராம் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி சம்போ செந்திலுடன் தொடர்பு கொண்ட நபர்களின் முழு விவரங்களையும் போலீசார் கேட்டுள்ளனர்.

    • வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்.
    • தமிழகத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப் பட்டார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மலர்க்கொடி, சதிஷ், ஹரிஹரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறையின் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்து வருவதால் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் குற்ற பின்னணி இல்லாதவர்கள் மட்டுமே வழக்கறிஞர்களாக பதிவு செய்யப்பட்டு வருகின்றனர் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞரை தனிப்படை கைது செய்தது.

    திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே மாத்தூரை சேர்ந்த சிவா என்ற வழக்கறிஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூவிருந்தவல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    வழக்கறிஞர் சிவா கைதுடன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்தில், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் சிவா மூலம் கொலையாளிகளுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ரவுடி சம்போ செந்திலுடன் வழக்கறிஞர் சிவா தொடர்பில் இருந்ததால் அவரை பிடித்து விசாரித்தபோது பணப்பரிவர்த்தனை விவகாரம் தெரியவந்துள்ளது.

    • மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது கொலையில் 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மாநில தலைவராக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், என்னை பொற்கோடி ஆம்ஸ்ட்ராங் என்ற பெயரை பயன்படுத்தாமல், திருமதி ஆம்ஸ்ட்ராங் என்று பயன்படுத்துங்கள் என்று ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஆம்ஸ்ட்ராங்கின் பெயரை நினைவூட்டவே இது போன்று மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல்.
    • 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 16வது நபராக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே, வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஏற்கனவே கைதான ஹரிஹரன் தந்த தகவலின்பேரில், 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிக் வீரர்கள் மூலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

    விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள அருளின் செல்போன், அதிமுக கவுன்சிலரான ஹரிதரனிடம் இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    கட்சிக்கு கலங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    • மலர்க்கொடி, ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • 14 பேரில் திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.

    ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், நேற்று மலர்க்கொடி, ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 14 பேரில் திருவேங்கடம் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்திலை போலீசார் தேடி வருகின்றனர்.

    நேற்று கைது செய்யப்பட்ட ஹரிஹரன் கொடுத்த தகவலின் பேரில் சம்போ செந்திலுக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

    செந்தில் கொடுத்த பணத்தில் ஹரிஹரன் மூலமாக ரூ.4 லட்சம் பணம் அருளுக்கு கைமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஹரிஹரன் மூலமாக அருள் மற்றும் பொன்னை பாலு கும்பலை, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×