search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arunachal Pradesh"

    • ரஞ்சி கோப்பையில் அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின
    • முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா அணிகள் மோதின

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அருணாச்சபிரதேச அணி 30.3 ஓவர்களில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஜுன் டெண்டுல்கர் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ரஞ்சி கோப்பையில் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் 5 விக்கெட் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனையடுத்து பேட்டிங் செய்த கோவா அணி 54 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்களை குவித்துள்ளது.

    • இந்தியா-சீனா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.
    • இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம்.

    புதுடெல்லி:

    கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் நிலவியது. பின்னர் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எல்லையில் சில பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன. இதற்கிடையே இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லை தொடர்பாகவும், இந்தியா-சீனா இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்தநிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை செல்லாத மலைச்சிகரம் ஒன்றுக்கு தேசிய மலையேற்ற பயிற்சி நிறுவனத்தின் (நிமஸ்) ஒரு குழுவினர் சாகசப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் வெற்றிகரமாக 20,942 அடி உயரத்தில் உள்ள அதன் உச்சியை அடைந்தனர். இதையடுத்து அந்த சிகரத்துக்கு சாங்யாங் கியாட்சோ என ஆறாவது தலாய் லாமா பெயரை சூட்டினர். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில்,

    ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) சீனாவுக்கு உரிய பகுதியாகும். அப்பகுதியில் உள்ள இடத்துக்கு இந்தியா பெயர் சூட்டுவது சட்டவிரோதம். இதுவே சீனாவின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்துள்ளார்.

    • எல்லை தொடர்பாக இந்தியா-சீனா இடையே பிரச்சினை இருந்து வருகிறது.
    • இந்திய குழுவினரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்றது சீனா.

    கவுகாத்தி:

    கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன வீரர்கள் அத்துமீறலை தொடர்ந்து இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் 20 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பதட்டம் நிலவியது. பின்னர் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து எல்லையில் சில பகுதிகளில் படைகள் திரும்ப பெறப்பட்டன.

    இதற்கிடையே இந்தியா வில் வடகிழக்கு பகுதியில் உள்ள அருணாச்சல பிரதேசத்தின் எல்லை தொடர்பாகவும், இந்தியா-சீனா இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திராங்கை தளமாக கொண்ட தேசிய மலை ஏறுதல் மற்றும் சாகச விளையாட்டு கழகத்தின் 15 பேர் கொண்ட குழு கடந்த சனிக்கிழமை அருணாச்சல பிரசேதத்தின் தபாங் பகுதியில் இதுவரை யாரும் ஏறாத சிகரத்தில் ஏறினர்.

    மேலும் அந்த சிகரத்திற்கு 6-வது தலாய்லாமாவான சாங்யாங் கியாட்சோவின் நினைவாக 'சாங்யாங் கியாட்சோ சிகரம்' என்று பெயரிட்டது.

    6-வது தலாய்லாமாவின் பெயரை தேர்ந்தெடுப்பது அவரது காலத்தால் அழியாத ஞானம் மற்றும் மோன்பா சமூகத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு ஒரு மரியாதை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

    இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளி யுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் லின்ஜியான் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாங்யாங் பகுதி சீன பகுதியாகும். இந்திய குழுவினரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என்றார். 

    • 6 முதல் 14 வயதுடைய 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்

    அருணாச்சலப்பிரதேசத்தில் 21 பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி வார்டன் யும்கென் பக்ராவிற்கு சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது.

    விடுதி வார்டனுக்கு உதவி செய்த முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் இந்தி ஆசிரியர் மார்போம் நகோம்டிர் ஆகியோருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளியில் படிக்கும் தனது 12 வயதான இரட்டை மகள்களை வார்டன் யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் புகார் அளித்தார்.

    இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. அப்போது தான் 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

    மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு அவர்களுக்கு வார்டன் போதைப்பொருட்கள் கொடுத்துள்ளார் என்றும் இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மாணவர்களை அவர் மிரட்டியுள்ளார். வார்டனால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    விடுதி வார்டனின் அத்துமீறல் குறித்து பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளனர். ஆனால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதால் மாணவர்களை அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 

    • மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது.
    • சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு உள்ளது.

    இடாநகர்:

    அருணாசல பிரதேசத்தில் அரசு பள்ளிகளின் நிலை குறித்த கேள்வி ஒன்றுக்கு சட்டசபையில் கல்வி மந்திரி பசங் டோர்ஜி சோனா பதில் அளித்தார்.

    அப்போது அவர், மாநிலத்தில் செயல்படாத அல்லது மாணவர் சேர்க்கை இல்லாத சுமார் 600 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    சில பள்ளிகள் பிற பள்ளிகளுடன் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    இதைப்போன்ற மேலும் சில பள்ளிகளை மூட திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

    • 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
    • பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.

    அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பீமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

    நேற்று நடைபெற்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகிறார்.

    இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை நேற்று சந்தித்தனர். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி 3-வது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் பாஜக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்றது.
    • 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

    இடா நகர்:

    அருணாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் முதல் மந்திரி பீமா காண்டு உள்பட பா.ஜ.க.வை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து 46 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பீமா காண்டு மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் 3-வது முறையாக பீமா காண்டு அருணாசல பிரதேசத்தின் முதல் மந்திரி ஆகிறார்.

    இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை இன்று சந்தித்தனர். அப்போது அவர்களை ஆட்சி அமைக்கும்படி ஆளுநர் கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பதவியேற்பு விழா நாளை நடைபெறுகிறது.

    • பாராளுமன்ற தேர்தலுடன் 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.
    • மாநிலங்களுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

    இந்நிலையில், இன்று அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில், அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 44 தொகுதிகளில் பாஜக வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

    ஆனால், சிக்கிம் மாநிலத்தில் ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 26க்கும் மேற்பட்ட இடங்களை வென்றுள்ளது. இதில், பாஜகவும், காங்கிரசும் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இரு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நன்றி அருணாச்சல பிரதேசம்! இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள், அரசியல் வளர்ச்சிக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.

    பாஜக மீது மீண்டும் நம்பிக்கை வைத்த தங்களுக்கு எனது நன்றிகள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் அதிக வீரியத்துடன் பாடுபடும்.

    தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் விதிவிலக்கான பாஜக நிர்வாகிகளின் கடின உழைப்பை நான் பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் மாநிலம் முழுவதும் சென்று மக்களுடன் இணைந்த விதம் பாராட்டுக்குரியது.

    2024ம் ஆண்டு சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்களில் அவர்களின் வெற்றிக்காக எஸ்கேஎம் மற்றும் முதலமைச்சர் தமாங்கோலேக்கு வாழ்த்துக்கள். வரும் காலங்களில் சிக்கிமின் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்த மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்.

    சிக்கிம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகளையும் நான் பாராட்டுகிறேன். சிக்கிமின் வளர்ச்சி மற்றும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் எங்கள் கட்சி எப்போதும் முன்னணியில் இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 43 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
    • இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது.

    அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தது. அங்குள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 82 சதவீத வாக்குகள் பதிவானது.

    சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

     அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டன.ஏற்கனவே அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.

    இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 10 மணி நிலவரப்படி ஓட்டுக்கள் எண்ணப்பட்ட 50 தொகுதி களில் 35 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். மதியம் 1 மணிக்கு அவர்கள் வெற்றி முகத்துடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல மேலும் 3 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 44 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு பாரதீய ஜனதா சென்று இருக்கிறது. அதே சமயத்தில் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட வெற்றி கிடைக்கவில்லை. 19 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் சிலர் மோசமான நிலையில் தோல்வியை தழுவினார்கள்.

    அருணாசல பிரதேசத்தில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில் அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். அருணாசல பிரதேசத்தின் முக்கிய சாலைகளில் இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

    முதல்-மந்திரி பெமா காண்டுவை அந்த கட்சி தொண்டர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். அவர் 3-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க 2 பாராளுமன்ற தொகுதிகளிலும், 41 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றிப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதனோடு ஆந்திரா, ஒரிசா, அருணாச்சல்ப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அருணாச்சலில் உள்ள 60 இல் 50 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

    ஏற்கனவே 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக 42 சீட்கள் முன்னிலையில் உள்ளது. மாநில கட்சிகளான ஜே.டி (யு) 7 இடங்களிலும், என்.என்.பி 5 இடங்களிலும், பி.பி.ஏ ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது உள்ளது. காங்கிரஸ் இதுவரை 5 இடங்களில் வென்றுள்ளது.

    சுயேச்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி அருணாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெரும் மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இதுவரை நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி ஆளும் மாநிலக் கட்சியான சிக்கிம் க்ரந்திகாரி மோர்ச்சா (எஸ்.கே.எம்) கட்சி மொத்தம் உள்ள 32 இல் 29 சீட்களில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் சிக்கிமில் மீண்டும் எஸ்.கே.எம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

    • அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.

    இந்தியாவில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களில் முறையே ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 ஆகிய தேதிகளில் 6 கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு நேற்று (ஜூன் 1) கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதற்கிடையே ஆந்திரா, ஒரிஷா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும்  நடத்தப்பட்டது,

    மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் இன்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வழக்கமாக 8 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு காலை 6 மணிக்கே தொடங்கியது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 மக்களவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் உள்ள 32 மக்களவைத் தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலின்போது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று முடிந்தது.

    அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2019 தேர்தலில் 82.17 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 82.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 இல் 10 தொகுதிகளில் ஆளும் கட்சியான பாஜக போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளது.

    அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பேமா கந்து, துணை முதலமைச்சர் சவ்னா மெய்ன் ஆகியோர் போட்டியின்றி வெற்றிபெற்றுள்ளனர். கடந்த 2019 தேர்தலில் 46 தொகுதிகளில் வெற்றி பபெற்று பாஜக ஆட்சியமைத்திருந்தது . மற்றொரு வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக பிரேம் சிங் தமன் ஆட்சியில் உள்ளார். சிக்கிமில் இந்த தேர்தலில் 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன.
    • சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இட்டாநகர்:

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீன எல்லையையொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள திபாங் பள்ளத்தாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 33-ல் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

    மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன. மேலும் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு துண்டானது. இதனால் ஹுன்லி-அனினி இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

    சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    தற்போது வானிலை மோசமாக இருப்பதால் சீரமைப்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×