search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Association Anniversary"

    • ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்க ஆண்டு விழா நடந்தது.
    • சட்ட ஆலோசகர் பீர்முகமது நன்றி கூறினார்.

    மேலூர்

    மேலூரில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கத் தின் சார்பில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிவ கங்கை மாவட்ட சப் கலெக் டர் சரவண பெருமாள் கலந்து கொண்டு பேசினார்.

    மேலூரில் ஒய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் பேரவை கூட்டம் மற்றும் ஆண்டு விழா தனியார் திருமணமண்டபத்தில் நடை பெற்றது. மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் தவமணி தலைமை தாங்கினார். இணைச் செய லாளர் புலவர் பரஞ் ஜோதி நிகழ்ச்சி தொகுத்து வழங் கினார்.

    செயற்கு செயற்குழு உறுப்பினர் எஸ்.செல்வ நாதன் வரவேற்று பேசினார். சங்கச் செயலாளர் சேகர் ஸ்ரீதர் ஆண்ட றிக்கை வாசித் தார். சங்க பொருளா ளர் ராமலிங்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

    துணைத் தலைவர் துரைராஜ் தீர்மா னங்களை முன்மொ ழிந்தார். சங்கத் தின் கவுரவ தலைவர் நல்லா சிரியர் ராமையா மாணவர் களுக்கு பரிசு வழங்கி னார். சங்கத்தின் கவுரவ தலைவர் கள் பெரிய கருப்பன், செந் தில்குமார், இணை செயலா ளர்கள் பரந்தாமன், முகமது அலி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    சிறப்பு விருந்தி னர்களாக சிவகங்கை மாவட்ட துணை கலெக்டர் சரவணபெரு மாள், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ஒய்வு தனசே கரன், மேலூர் உதவி கருவூல அலுவலர் ரமேஷ், ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர்.

    மதுரை மாவட்டம் ஓய்வூ தியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி, மதுரை மண்ட லம் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தாமோதரன் ஆகியோர் பங்கேற்றனர். சட்ட ஆலோச கர் பீர்முகமது நன்றி கூறி னார்.

    • பல்வேறு பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது
    • 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஒலி-ஒளி மேடை அலங்காரம் மற்றும் சப்ளையர்ஸ் பந்தல் அமைப்பாளர் நலச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது.

    மேலும் இவ்விழாற்கு சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜீவா அனைவரையும் வரவேற்றார் சங்கத் தலைவர் தயாநிதி முன்னிலை வகித்தார்.

    துணைத் தலைவர் சேட்டு தலைமையில் தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக நகர மன்ற தலைவர் ஏ.சி. மணி, நகர மன்ற துணை தலைவர் பாரி பாபு, டி. மற்றும் ஒலி ஒளி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வம் மாவட்ட பொறுப்பாளர் சுவாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பல்வேறு ஊர்களில் கொண்டுவரப்பட்ட ஒலி ஒளி அமைப்பு பொருட்கள் பந்தல் அமைப்பு பொருட்கள் அலங்காரப் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டடன.

    இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், துரை மாமது அதிமுக கவுன்சிலர் சுதாகுமார் ஒலி ஒளி மேடை அலங்காரம் சப்ளையர் பந்தல் அமைப்பாளர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இறுதியில் செயற்குழு உறுப்பினர் மனோகர் நன்றி கூறினார்

    ×