search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atmospheric circulation"

    • மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று மதியம் வரை விடிய விடிய பெய்து வருகின்றது.

    கடலூர்:

    தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று மதியம் வரை விடிய விடிய பெய்து வருகின்றது. மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை கொட்டி தீர்த்து வரும் பலத்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

    மேலும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவில் தொடர் மழை காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முடியாமல் முடக்கியது குறிப்பிடத்தக்கதாகும். சாலை யோரத்தில் விற்பனை செய்யப்பட்ட விநாயகர் சிலை பூஜை பொருட்கள் பழ வகைகள் போன்றவைகள் முழுவதும் தொடர் மழை காரணமாக நாசமடைந்ததால் லட்சக்கணக்கான ரூபாய் சாலையோர வியாபாரிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளதாக வியாபாரிகள் மிகுந்த கவலையுடன் தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தொடர் மழை காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆற்றில் தற்போது நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆறு ஓரங்களில் இருந்த கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக வைத்துள்ளனர்‌ இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் தற்போது தேங்கி வருவதால் நெற்பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடு பயிர்கள் நாசமாகும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக விவசாயிகள் மிகுந்த மனக்கவலையுடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் காலை முதல் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் குடை பிடித்த படியும் மிகுந்த அவதியுடன் சென்றதையும் காணமுடிந்தது. மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும், இரு சக்கர வாகனங்களில் சென்ற மக்கள் மிகுந்த அவதியுடன் சென்றதையும் காண முடிந்தது. 

    கடலூர் மாவட்டத்தில் மில்லிமீட்டர் அளவில் மழையளவு பின்வருமாறு:-

    . கீழச்செருவாய் - 106.0, பெல்லாந்துறை - 84.2 தொழுதூர் - 47.0, வடக்குத்து - 33.0, லால்பேட்டை - 33.0, காட்டுமன்னார்கோயில் - 32.0, வேப்பூர் - 23.௦ கொத்தவாச்சேரி - 20.0, குறிஞ்சிப்பாடி - 19.0 . ஆட்சியர் அலுவலகம் - 17.8எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 12.5 லக்கூர் - 11.0 13. பண்ருட்டி - 11.0, கடலூர் - 9.6, வானமாதேவி - 9.0, அண்ணாமலைநகர் - 9.0, 17. சிதம்பரம் - 4.4 பரங்கிப்பேட்டை - 2.8, சேத்தியாத்தோப்பு - 2.2 விருத்தாசலம் - 2.2, ஸ்ரீமுஷ்ணம் - 2.1, மீ-மாத்தூர் 

    ×