search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSvSL"

    • முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலிய அணி, 6 புள்ளிகளுடன் குரூப்-1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குரூப்-1 லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹர்ஷிதா 34 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட் 4 விக்கெட்டுகளும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அபாரமாக விளையாடி அரை சதம் அடித்த ஹீலி 54 ரன்களும், பெர்த் மூனே 56 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 6 புள்ளிகளுடன் குரூப்-1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் கிட்டத்தட்ட அரையிறுதியை எட்டியது.

    ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்து. இந்த போட்டி நாளை மறுதினம் நடக்க உள்ளது. 

    • முதலில் ஆடிய இலங்கை 20 ஓவரில் 157 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 158 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    பெர்த்:

    Australia beat Sri Lanka in T20 world cup

    டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.

    நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். சரித் அசலங்கா 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 11 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 17 ரன்னிலும், மேக்ஸ்வெல் 23 ரன்னிலும் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ஆரோன் பின்ச் நிதானமாக ஆடினார். ஸ்டோய்னிஸ் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். அவர் 17 பந்தில் அரை சதமடித்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 18 பந்தில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 59 ரன்னும், ஆரோன் பின்ச் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
    • கொரோனா தொற்றால் ஆடம் ஜாம்பா இடம்பெறவில்லை.

    பெர்த்:

    டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் இன்று மோதி வருகின்றன. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுதை அடுத்து இன்றைய போட்டியில் அவர் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் குசால் மெண்டிஸ் 5 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய தனஞ்செய டி சில்வா, நிசரங்காவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்த நிலையில் டி சில்வா 26 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய நிசங்கா 40 ரன்னில் வெளியேறினார். பானுகா ராஜபக்ச 7 ரன்னிலும், டாசன் ஷனகா 3 ரன்னிலும், ஹசரங்கா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. சரித் அசலங்கா 38 ரனனுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.

    • ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் எடுத்தது.
    • இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் முதல் டெஸ்ட்டில் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 59 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் லயன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது.

    ஆஸ்திரேலியா அணி 70.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 321 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 109 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 113 ரன்னில் சுருண்டது. இதனால் 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது.

    5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி ஆடியது. 4 பந்துகள் மட்டுமே சந்தித்த ஆஸ்திரேலியா 10 ரன்கள் எடுத்தது. இதில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டும் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது.

    இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளீதரன் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை விமர்சித்துள்ளார். #AUSvSL
    ஆஸ்திரேலியா - இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்னிலும், 2-வது போட்டியில் 366 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது. இத்தொடருக்கு வார்னே - முரளீதரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதில் இலங்கை மோசமான தோல்வியை சந்தித்தது குறித்து முரளீதரன் கூறுகையில் “குசால் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் அதிக திறமை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இது அவர்களின் பேட்டிங் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்துகிறது.

    கடந்த 3-4 ஆண்டுகளாக இந்த கதை தொடர்கிறது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுதான் தற்போது நிகழ்ந்துள்ளது. சர்வதேச போட்டியில் களமிறங்குபோது என்ன செய்ய வேண்டும் என்ற திறன் அவர்களிடம் இல்லை.

    தற்போது இலங்கை மிகவும் மோசமாக விளையாடுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஆட்டமும் முன்னர் போல் சிறப்பாக இல்லை. எனினும், ஆஸ்திரேலியாவை விட இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடியது.

    இலங்கை வீரர்கள் அவர்களுடைய லெவலில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் இலங்கை டெஸ்டை வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுவது கடினம். இது நடப்பதாக நான் பார்க்கவில்லை” என்றார்.
    டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்த திணறி வரும் மிட்செல் ஸ்டார்க் மீதான விமர்சனம் நியாயமானதல்ல என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார். #AUSvSL #MitchellStarc
    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். இந்தியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சோபிக்கவில்லை. ஐந்து போட்டிகளிலும் 15 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

    பேட் கம்மின்ஸ் அபாரமாக விளையாடி வரும் நிலையில், மிட்செல் ஸ்டார்க் திணறி வருகிறார். இதனால் அவர் மீது கடும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ள மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது நியாயமானதல்ல என்று சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாதன் லயன் கூறுகையில் ‘‘உண்மையிலேயே மிட்செல் ஸ்டார்க் குறித்த விமர்சனங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. மிட்செல் ஸ்டார்க் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். யாராவது ஒருவரால் 200 விக்கெட் வீழ்த்த முடியும் என்றால், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். மிட்செல் ஸ்டார்க்கிற்கு நான் ஆதரவாக உள்ளேன். வீரர்கள் டிரஸ்ஸிங் அறையில் ஒவ்வொருவரும் ஆதரவாக உள்ளனர். ஆகவே இது முற்றிலும் நியாயமானதல்ல’’ என்றார்.
    பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியா லாபஸ்சேக்னே (81), டிராவிஸ் ஹெட் (84) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 323 ரன்கள் குவித்தது. #AUSvSL
    ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.

    மார்கஸ் ஹாரிஸ் 40 ரன்களுடனும், நாதன் லயன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹாரிஸ் 44 ரன்கள் எடுத்த நிலையிலும், நாதன் லயன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் ஆஸ்திரேலியா 82 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு லாபஸ்சேக்னே உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டது. அரைசதம் அடித்த இருவரும் சதத்தை நோக்கி சென்றனர்.

    ஆனால் அணியின் ஸ்கோர் 248 ரன்களாக இருக்கும்போது லாபஸ்சேக்னே 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.


    லக்மல்

    டிராவிஸ் ஹெட் 84 ரன்கள் எடுத்த நிலையில் லக்மல் பந்தில் ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் பேட்டர்சன் 30 ரன்களும், மிட்செல் ஸ்டார்க் 26 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 323 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை விளையாடியது. இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கை அணி இன்னும் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. #AUSvSL
    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமானே 12 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சண்டிமல் 5 ரன்னிலும், கருணரத்னே 24 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 5 ரன்னிலும் வெளியேறினர்.


    ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்கள்

    அதன்பின்னர் ரோசன் சில்வாவுடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசன் சில்வா 56 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒருபுறம் டிக்வெல்லா நிலைத்து நிற்க மறுபக்கம் பெரேரா 1 ரன்னிலும், லக்மல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 106 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க்

    இதற்குமேல் நின்று ஆடினால் பலனில்லை என்பதை புரிந்து கொண்ட டிக்வெல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த டிக்வெல்லா 64 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 144 ரன்கள் எடுத்திருந்தது. சமீரா ரன்ஏதும் எடுக்காமல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது.


    டிக்வெல்லா

    ஆஸ்திரேலிய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
    இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் என்ன செய்ததோ? அதை அப்படியே பின்பற்ற விரும்புகிறோம் என இலங்கை அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது. #AUSvSL
    இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பகல்- இரவு டெஸ்டான முதல் ஆட்டம் பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது.

    ஆஸ்திரேலியா தொடர் குறித்து இலங்கை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயகே கூறியதாவது:-

    2 டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணியின் பவுலிங் யுக்திகளை ஆராய்ந்து வருகிறோம். எந்தெந்த இடங்களில் இந்திய பவுலர்கள் வீசினார்கள் என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். அதாவது இந்திய அணி பவுலர்கள் என்ன செய்தார்களோ, மற்ற அணியினர் என்ன செய்தார்களோ அதை நாமும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இலங்கை பவுலர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய விஷயமாகும் இது. அந்த நம்பிக்கையைத்தான் இப்போதைக்கு நாங்கள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்.

    பேட்டிங், பவுலிங், ஏன் பீல்டிங்கிலும் கூட இந்திய அணி நிரூபித்துள்ளது, எங்கு சென்றாலும் நிரூபித்து வருகின்றனர். இதைத்தான் இந்திய அணியிடமிருந்து நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். இங்கு டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்துள்ளோம். நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா செல்கிறோம். ஆகவே ஆஸ்திரேலியாவில் வெல்ல வேண்டும் என்பது விருப்பம். பார்ப்போம். இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்த நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால் திட்டவட்டாக கூறமாட்டேன்.

    இவ்வாறு கூறினார் ருமேஷ் ரத்னாயகே.
    இலங்கைக்கு எதிரான பிரிஸ்பேன் முதல் டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய லெவன் அணியில் புதுமுக வீரர்களான ரிச்சர்ட்சன், கர்ட்டிஸ் பேட்டர்சன் இடம்பிடித்துள்ளனர் #AUSvSL
    ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான பகல்-இரவு ஆட்டமாக நடக்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து காயம் காரணமாக ஹசில்வுட் விலகியுள்ளார். மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டுள்ளார்.

    இதனால் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் துணைக்கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய கர்ட்டிஸ் பேட்டர்சன், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் விராட் கோலியை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிச்சர்ட்சன், பேட்டர்சன் பெயர் இடம்பிடித்துள்ளது. இதனால் இருவரும் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக உள்ளனர்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. மார்கஸ் ஹாரிஸ், 2. ஜோ பர்ன்ஸ், 3. கவாஜா, 4. மார்னஸ் லாபஸ்சேக்னே, 5. டிராவிஸ் ஹெட், 6. கர்ட்டிஸ் பேட்டர்சன், 7. டிம் பெய்ன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), 8. பேட் கம்மின்ஸ், 9. மிட்செல் ஸ்டார்க், 10. ரிச்சர்ட்சன், 11. நாதன் லயன்.
    இலங்கை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன்களாக பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #AUSvSL
    ஆஸ்திரேலியா - இலங்கை இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன்களாக ஜோஷ் ஹசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

    தற்போது ஜோஷ் ஹசில்வுட் முதுகுவலி காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். மிட்செல் மார்ஷ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் ஆகியோர் துணைக் கேப்டன்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


    டிராவிஸ் ஹெட்

    ஆஸ்திரேலியா - இலங்கை இடையிலான பகல்-இரவு ஆட்டமாக நடக்கும் முதல் டெஸ்ட் பிரிஸ்பேனில் நாளைமறுநாள் (24-ந்தேதி) தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிப்ரவரி 1-ந்தேதி கான்பெர்ராவில் தொடங்குகிறது.
    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பயிற்சி ஆட்டத்தில் சதம் விளாசிய பேட்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் ‘கப்பா’வில் வருகிற 24-ந்தேதி பகல்-இரவு டெஸ்டாக நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

    இலங்கை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இடது கை பேட்ஸ்மேனான கர்ட்டிஸ் பேட்டர்சன் இரண்டு இன்னிங்சிலும் முறையே 157, 102 அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில் பிரிஸ்பேன் டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டர்சன் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து தேர்வாளர் டிரேவோர் ஹோன்ஸ் கூறுகையில் ‘‘கர்ட்டிஸ் வியாழக்கிழமை தொடங்கும் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இணைந்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால், நாட்டில் நடக்கும் முக்கியமான தொடர்களில் சதம் அடிக்க வேண்டும். கர்ட்டிஸ் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த வாரம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இரண்டு இன்னிங்சிலும சதம் அடித்துள்ளார். இதனால் அவர் அணிக்கு தகுதியானவர் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.
    ×