search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மூனே, ஹீலி அபார ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது ஆஸி.
    X

    மூனே, ஹீலி அபார ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது ஆஸி.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது.
    • ஆஸ்திரேலிய அணி, 6 புள்ளிகளுடன் குரூப்-1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற குரூப்-1 லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இலங்கை அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹர்ஷிதா 34 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மேகன் ஷட் 4 விக்கெட்டுகளும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. அபாரமாக விளையாடி அரை சதம் அடித்த ஹீலி 54 ரன்களும், பெர்த் மூனே 56 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, 6 புள்ளிகளுடன் குரூப்-1 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் கிட்டத்தட்ட அரையிறுதியை எட்டியது.

    ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்து. இந்த போட்டி நாளை மறுதினம் நடக்க உள்ளது.

    Next Story
    ×