என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Avdaiyarkulam"
- நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனைமர விதைகள் நடும் விழா நடைபெற்றது.
- திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எல்பாஸ் விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனை மர விதைகள் நடும் விழா நடைபெற்றது. நாடார் வியாபாரிகள் சங்கத்தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் கண்மணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் ஆசிரியர் பயிற்றுநர்கள் நபில் புஹாரி, ஜெகதீஸ்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டு அப்பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைச்செயலர் டாக்டர் எஸ்.யாபேஷ், நாடார் வியாபாரிகள் சங்க செயலர் செல்வக் குமார், பொருளாளர் செல்வின், துணைத்தலைவர் அழகேசன், துணைச்செயலர்கள் சத்தியசீலன், பால கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எல்பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் நன்றி கூறினார்.