என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bananas destroyed"
- களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊரில் விவசாயிகள் முத்துகிருஷ்ணன் , இளையபெருமாள் , செந்தில்சாமி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன.
- வாழைகளை குதறி பிடுங்கி குருத்துகளை தின்று சேதப்படுத்தியுள்ளன.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன் (வயது45), இளையபெருமாள் (60), செந்தில்சாமி (40) ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன.
இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் 50-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளை குதறி பிடுங்கி குருத்துகளை தின்று சேதப்படுத்தியுள்ளன.
இவைகள் 4 மாதமே ஆன ஏத்தன் ரக வாழைகள் ஆகும். இதனால் விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக இப்பகுதியில் காட்டு பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல், மலையடிவாரத்தில் உள்ள புதர்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அவைகள் இரவு நேரங்களில் விளைநிலங்களை நாசம் செய்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் விளை–நிலங்களுக்குள் உலா வரும் பன்றிகளால் விவசாயிகளின் உயிருக்கும் ஆபத்து நிலவுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே காட்டு பன்றிகளை விரட்டவும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பெரும்படையார் கூறியதாவது:-
களக்காடு மலையடி வாரத்தில் வனவிலங்குகளால் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. வனவிலங்குகள் நாசம் செய்யும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், வனத்துறையினர் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடுமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
கோபி அருகே உள்ள நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிங்காட்டுப்புதூர் முள்ளங்கரை அய்யம்புதூர் செல்வபுரம்காலனி உள்பட பல பகுதிகளில் நேற்று கனமழை மற்றும் சூறாவளிக் காற்றும் வீசியது.
இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தது.
கடந்த ஆண்டுகளில் போதிய தண்ணீர் இல்லாததினால் விவசாயம் செழிக்காத நிலையில் விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகினர். அதனை ஈடுகட்டும் வகையில் இந்தாண்டு வாழைமஞ்சள் என பயிர் செய்து வாங்கியுள்ள கடன்களை அடைத்துவிடலாம் என்று எண்ணி இருந்தனர்.
தற்போது அடித்த சூறாவளிக் காற்றினால் அந்த எண்ணமும் சிதைந்து விட்டதாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல் செல்வபுரம் காலனியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குஅடித்த சூறாவளிக்காற்றினால் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து அவை காற்றில் தூக்கிவீசப்பட்டது.
இதில் மேற்க்கூரை ஓடுகள் மற்றும் சிமெண்ட் அட்டைகள் 500 அடி தூரத்திற்கும் மேல் தூக்கிவீசப்பட்டது. இதனால் அப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சூறாவளிக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்துமின் கம்பிகள் அறுந்ததால் நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றியும் வீடுகளில் மேற்கூரை இன்றியும் தவித்துள்ளனர். தினக்கூலிக்கு செல்லும் தங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதை புதுப்பிக்க வீடுகளின் மேற்கூரைகளை இழந்துதவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்