search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhoomipooja"

    • ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
    • பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்தநிலையில் நாளுக்கு நாள் குடியிருப்புகளும், வணிக வளாகங்களும் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிகரித்துவந்தது.

    இந்த நிலையில் கழிவு நீரை சுத்திகரித்து விவசாய பயன்பாட்டிற்கு விடுவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் மற்றும் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து ஊராட்சி சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியம் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லோகுபிரசாந்த், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலர் சிவகுமார், வார்டு உறுப்பினர்கள், சுகாதார துறையினர், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
    • ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    உடுமலை:

    மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியவாளவாடி, வடபூதிநத்தம், ராகல்பாவி ஆகிய ஊராட்சிகளில் பூமிபூஜை மற்றும் முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் எம்.எல்.ஏ.வுமான சி.மகேந்திரன் கலந்து கொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.10 லட்சத்து 41 ஆயிரத்தில் முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் ரூ.67 லட்சத்து 65 ஆயிரத்தில் புதிய பணிகளுக்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் உடுமலை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செழியன், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரிய வாளவாடி தேவராஜ், இராகல்பாவி சுமதி செழியன், ஆர்.வேலூர் அன்னலட்சுமி ஜெயகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், விமலா, ராசாத்தி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    குண்டடம்:

    குண்டடம் ருத்ராவதி பேரூராட்சியில் மூலதன மானியத் திட்டத்தின் கீழ் 1-வது வார்டு கொக்கம்பாளையம் சாலை முதல் கிழக்கே ருத்ராவதி பேரூராட்சி சாலை வரையும் மற்றும் வார்டு எண் 8 கணபதிபாளையம் சாலை முதல் காளிபாளையம் சாலை வரை உள்ள மண் சாலைகளை தார்ச்சாலையாக அமைக்க ரூ.2 கோடியே 71 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் கண்ணம்மாள் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சையது இப்ராஹிம் முன்னிலை வகித்தார். தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ் பூமி பூஜை செய்து ெதாடங்கிவைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒப்பந்ததாரர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
    • ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது

    ஊத்துக்குளி, ஜூலை.19-

    ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது. ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் என். பிரபு தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ஒன்றிய தலைவர் பி. பி.பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார்.

    மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என். கணேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலன், கலாமணி உள்பட பல கலந்து கொண்டனர்.

    திட்டச்சேரியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடந்த பூமிபூஜையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு மரைக்கான்சாவடியில் கடந்த 20 ஆண்டு காலமாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இது கொடுத்து முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட வட்டார தலைவர் செல்வ செங்குட்டவன், திட்டச்சேரி தி.மு.க நகர செயலாளர் முகமது சுல்தான், பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. 

    இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி பாலாஜி, ஊராட்சி செயலாளர் பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    ×