search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Body of teenager"

    • குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார்.
    • வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியில் முத்துக்கு மாரசாமி கோவில் பின்பு றத்தில் குளம் உள்ளது. இக்குளத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், ,பேரில் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் இறந்து கிடந்த உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் குளத்தில் இறந்த உடலை மீட்பதற்காக கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்பு ரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்   

    கடலூர் முதுநகர் போலீசார் விசார ணையில்,கடலூர் முதுநகர் நாராயணன் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் மகன் கலைமணி (வயது 23). கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற கலைமணி, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். மேலும் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபரை காணவில்லை என வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இன்று அதிகாலை அவர் வீட்டின் அருகில் உள்ள முத்துக்குமாரசாமி கோயில் பின்புறம் உள்ள குளத்தில் கலைமணி பிணமாக இருந்தது தெரிய வந்தது.     இந்த நிலையில் இறந்த கலைமணி 3 நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவர் எப்படி குளத்தில் இறந்த நிலையில் கிடந்தார்? கொலையா? அல்லது தற்கொலையா? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடலூர் முதுநகரில் கோவில் அருகே குளத்தில் வாலிபர் பணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த குடிதாங்கி சாவடியில் உள்ள ரயில்வே டிராக்கில் இளம் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் ரயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இறந்தவர் யார்? ரயில்வே டிராக்கினை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ரயில்வே டிராக்கில் இறந்து கிடந்தவர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 26) என்பது தெரியவந்துள்ளது.

    • சாயல்குடி அருகே வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • அவரது உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள உறைகிணறு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் உடனே சாயல்குடி ேபாலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மான் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நட த்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் உடலில் ரத்தக்காயங்கள் தென்பட்டன. அங்கிருந்த தடயங்களை சேகரித்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கடலாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் உடலில் காயங்கள் உள்ளதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து ள்ளது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×