search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booster vaccination"

    • முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் பலர் உள்ளனர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும்

    திருப்பூர் : 

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 21.47 லட்சம் முதல் தவணை, 17.33 லட்சம் இரண்டாம் தவணை, 1.96 லட்சம் பூஸ்டர் தடுப்பூசி என இதுவரை மொத்தம்40.77 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 18 வயதை கடந்தவர்களுக்கு 22.44 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக 12 முதல் 14 வயதை கடந்தவர்களுக்கு 1.19 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வசதியாக ஆகஸ்டு 31-ந்தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்களிடையே ஆர்வம் இல்லாததால் இலக்கு ஒரு லட்சம் நிர்ணயிக்கப்பட்ட போதும் 15 ஆயிரம் தடுப்பூசி செலுத்துவதே மாவட்ட சுகாதாரத்துறைக்கு சவாலாக இருந்தது.

    செப்டம்பர் முதல் புதன்கிழமை மட்டும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3 மாதமாக சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்திய போதும், மக்களிடையே ஆர்வம் இல்லாததால் பெயரளவுக்கே முகாம்கள் நடந்து வந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 21 முதல் டிசம்பர் 21 வரையிலான ஒரு மாதத்தில் 1,346 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர் 211 பேர், இரண்டாம் தவணை செலுத்தியவர் 758 பேர், பூஸ்டர் செலுத்தியவர் 308 பேர்.

    இன்னமும் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் பலர் உள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. ஆனால் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி பூஸ்டருக்கான காலக்கெடு கடந்த பின்பும் செலுத்தி கொள்ளாமல் பலர் உள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், உருமாறிய பி.எப்.,7 வகை வைரஸ் பரவல் உலக நாடுகளில் துவங்கியுள்ளது. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் இரண்டு தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றனர். 

    • தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர்.
    • 20 லட்சத்து 627 ஆண்களுக்கும், 18 லட்சத்து 63 ஆயிரத்து 399 பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    கடந்த ஆண்டு ஜனவரி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது முதல் கோவேக்ஷின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டினர். பாதிப்பு நாளுக்குநாள் அதிகமாகிய பின் பெண்கள் தடுப்பூசி மையத்துக்கு வர துவங்கினர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 20 லட்சத்து 627 ஆண்களுக்கும், 18 லட்சத்து 63 ஆயிரத்து 399 பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 60 வயதை கடந்த 4.99 லட்சம் பேருக்கும், அதிகபட்சமாக 18 வயதை கடந்த 22.55 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 1.74 லட்சம் பேர் மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.சுகாதாரத்துறையினர் கூறுகையில், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர் பலர் இன்னமும் இரண்டாவது தவணை செலுத்தாமல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் செலுத்தாமல் உள்ளனர்.நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். வரும் முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றனர்.

    • 34-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
    • 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 1,341 இடங்களில் நடந்தது. மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாமில் 20 ஆயிரத்து 306 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியை விட பூஸ்டர் செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றனர்.

    • 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
    • 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 33-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது. இதில் 29 ஆயிரத்து 600 பூஸ்டர் தடுப்பூசி உட்பட 36 ஆயிரத்து, 700 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    இதற்கான பணியில் மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில், முந்தைய முகாமை ஒப்பிடுகையில் 33-வது முகாமில் கூடுதலாக 14 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்ட மக்களிடையே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கிறது என்றனர்.

    • கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற கோரிக்கை.
    • மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுகோள்.

    ஐதராபாத்:

    நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள அமீர்பெட் அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக தமிழிசை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தூத்துக்குடியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கொரோனா தொற்று தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை காலை தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

    தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி,ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தியாவின்75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர நகர் நல அலுவலர்டாக்டர் அருண்குமார், பொதுசுகாதார அலுவலர்கள், டாக்டர் சூரிய பிரகாஷ் மற்றும் செவிலியர்கள் மாநகராட்சியின் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
    • தடுப்பூசி செலுத்தாவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் பெரும்பாலானவர்கள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

    அவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

    ஆனால் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே பூஸ்டர் டோஸ் போடப்படும் என்பதால் மக்களிடம் அதற்கு அதிக ஆர்வம் இல்லை.

    இந்நிலையில் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இன்று முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

    அதன்படி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நாடுமுழுவதும் இன்று தொடங்கப்பட்டது. தமிழகத்திலும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது.அதன்படி ஏற்கனவே செயல்பட்டு வரும் முகாம்கள் தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான நெல்லை டவுன் ரதவீதிகள், நெல்லையப்பர் கோவில், சந்திப்பு ரெயில்நிலையம், வண்ணார்பேட்டை பஸ்நிறுத்தம் மற்றும் முக்கிய ஜவுளிக்கடைகள் முன்பு இன்று தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    பாளை மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரியில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முதல் நாளான இன்று குறைந்த அளவிலான பொதுமக்களே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

    ×