search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boris Johnson quits"

    பிரெக்ஸிட் விவகாரத்தில் டேவிட் டேவிஸ் இன்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், சிறிது நேரத்தில் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் பதவியில் இருந்து விலகியுள்ளார். #Brexit #BorisJohnson #UK
    லண்டன்:

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என குற்றம் சாட்டியிருந்தார்.

    டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நிதி நடைமுறைகள் மற்றும் வர்த்தக தொடர்புகள் உள்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டிய பிரிட்டன் நாட்டு மந்திரிகள் இருவரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், பிரெக்ஸிட் விவகாரம் திட்டமிட்டபடி முடிவுக்கு வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    ×