search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BrahMos missile"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7400 டன் எடையுள்ள ஐ.என்.எஸ். போர்கப்பல் 164 மீட்டர் நீளம் கொண்டது
    • பிரமோஸ் ஏவுகணை ஒலியை விட 3 மடங்கு அதிக வேகம் செல்ல கூடியவை

    இந்திய கடற்படைக்கு சொந்தமானது ஐ.என்.எஸ். இம்பால் (INS Imphal) போர் கப்பல். உலகின் நவீன போர் கப்பல்களில் ஒன்றான இது, கைடட் மிஸைல் டெஸ்ட்ராயர் (guided missile destroyer) எனும் வகையை சேர்ந்தது.

    மணிக்கு சுமார் 56 கிலோமீட்டர் தூரம் பயணிக்க கூடிய இக்கப்பல், 164 மீட்டர் நீளம் கொண்டது. சுமார் 7400 டன் எடை கொண்ட இம்பால் போர் கப்பலில் இருந்து தரையிலிருந்து தரைக்கு செல்லும் ஏவுகணைகளை செலுத்த முடியும்.

    இக்கப்பலை இவ்வருட இறுதியிலோ அல்லது 2024 தொடக்கத்திலோ நாட்டின் பாதுகாப்பிற்கு அர்ப்பணிக்க இந்திய கப்பற்படை திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கப்பலின் திறன் குறித்து பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

    அதில் ஒன்றாக இன்று, அக்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை (BrahMos missile) செலுத்தும் பரிசோதனை முயற்சி நடத்தப்பட்டது.

    இந்த முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய கடற்படையின் மேற்கு பகுதி ஆணையம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளது.

    கடந்த 2001 ஜூன் மாதம் பரிசோதனை செய்யப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, 2005ல் இருந்து இந்திய ராணுவத்தின் வான்வழி தாக்குதலுக்கான செயல்பாட்டில் உள்ளது. இந்த ஏவுகணை இந்தியாவின் இஸ்ரோ மற்றும் ரஷிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தின் கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிக வேகத்தில் பயணித்து, 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் படைத்தது.

    • 400 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    • கப்பலில் உள்ள இலக்கை ஏவுகணை தாக்கியதாகஇந்திய விமானப் படை தகவல்.

    பாதுகாப்பு பணியில் இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் இணைந்து செயல்படும் வகையில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை இன்று வங்காள விரிகுடா பகுதியில் நடைபெற்றது.

    சுகோய்-30 ரக போர் விமானம் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை கப்பலில் இருந்த நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக விமானப்படை தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் கடல் பாதுகாப்பில் இந்தியா ஆதிக்கம் செலுத்த இந்த ஏவுகணை சோதனை உதவியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.

    • இரட்டை செயல்பாட்டு திறனுடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கம்.
    • இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என தகவல்

    நிலத்தில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணை கொள்முதலுக்காக பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் தனியார் நிறுவனத்துடன் (பி.எ.பி.எல்.) மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

    ரூபாய் 1700 கோடி மதிப்பீட்டில் நிலத்தில் செயல்படக் கூடியதாகவும், கப்பல் மீதான தாக்குதலை முறியடிக்கும் வகையிலும், இந்த புதிய வகை ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.

    இரட்டை செயல்பாட்டு திறன் கொண்ட இந்த ஏவுகணைகள், இந்திய கடற்படையின் திறனை மேம்படுத்தும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்குள் தவறுதலாக விழுந்தது.
    • இந்த விவகாரத்தில் 3 விமானப்படை அதிகாரிகள் இன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    புதுடெல்லி:

    பிரம்மோஸ் ஏவுகணை கடந்த மார்ச் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது நம் அண்டை நாடான பாகிஸ்தானில் விழுந்தது. இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்துக்கு அந்நாடு கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே, இந்த ஏவுகணை தவறுதலாக செலுத்தப்பட்டது. அது ஒரு விபத்து. உரிய விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட 3 விமானப்படை அதிகாரிகள் பதவி பறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று வீசப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.
    புதுடெல்லி:

    இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான  ’பிரமோஸ் சூப்பர்சோனிக்’ ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். 200 கிலோ வெடிப் பொருளுடன் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

    இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறி விலகிச் சென்றும் தாக்கும் ஆற்றல் படைத்தது.



    கடந்த 2001-ம் ஆண்டு முதன்முதலாக தரையில் இருந்து பரிசோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கடலில் இருந்தபடி விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான Su-30 MKI போர் விமானத்தில் இருந்து இன்று ஏவி பிரமோஸ் ஏவுகணை இன்று பரிசோதிக்கப்பட்டது.

    இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்ததாககவும்  பிரமோஸ் ஏவுகணைவெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாககவும் இந்திய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
    இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக சீனா சூப்பர்சானிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. #BrahMosmissile #supersonicmissile
    பீஜிங்:

    சீனாவில், சூப்பர்சானிக் எச்டி-1 ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம், இந்த சோதனையை நடத்தியது. அந்நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுகணையை உருவாக்கி உள்ளது.



    இது, இந்திய-ரஷிய கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘பிரமோஸ்‘ ஏவுகணைக்கு போட்டியாக கருதப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையை விட விலை மலிவானது என்றும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் சீனாவை சேர்ந்த ராணுவ வல்லுனர் வெய் டோங்சு தெரிவித்தார். 
    பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் (DRDO) எஞ்சினீயர் கைது செய்யப்பட்டுள்ளார். #BrahMos #DRDO
    மும்பை:

    ரஷியா மற்றும் இந்தியா இணைந்து கூட்டு தொழில்நுட்பத்தில் பிரமோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்த ஏவுகணையை தயாரிக்கும் மையம் உள்ளது. 

    இந்நிலையில், ஏவுகணை தொழில்நுட்பட்தை அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பியதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பில் பணியாற்றும் (DRDO) எஞ்சினீயர் நிஷாந்த் அகர்வால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நிஷாந்த் அகர்வால் தற்போது விசாரணையில் உள்ளதாகவும், எந்த அளவு தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதை விசாரித்து வருவதாக ராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    ×