என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cane procurement"
- வேளாண்மை துறை அலுலவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுடன் முழுக் கரும்பும் சேர்த்து
வழங்கப்படும் என
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி சேலம் மாவட்டத்தில் 10,73,514 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 939 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ஆக மொத்தம் 10,74,453 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
இப்பொங்கல் பரிசு வழங்குவதற்காக 10,74,453 முழு கரும்பு சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மை துறை அலுலவர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய வட்டார அளவிலான கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள அலுவ லர்களால் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை களின்படி கரும்பின் தரம், உயரம் ஆகியவற்றை வேளாண்மை துறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு விவ சாயி களிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மேலும் கரும்பு கொள்முதல் தொடர்பான விபரங்கள் உரிய படிவத்தில் பெறப்பட்டு கரும்பு கொள்முதலுக்கான உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும். எனவே, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கக்கூடிய கரும்பு கொள்முதல் தொடர்பாக இடைத்தரகர்களையோ, இதர நபர்களையோ நம்ப வேண்டாம் என விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
சேலம் மாவட்டத்தில் பன்னீர் கரும்பு அதிகள
வில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், இதர மாவட்ட அலுவ லர்களும் சேலம் மாவட்டத்தில் கரும்பு கொள்முதல் செய்யலாம். எனவே விவசாயிகள் தங்களிடம் கொள்முதல் செய்ய வரும் அலுவலர்கள் குறித்த முழுமையான விவரம் மற்றும் எந்த
மாவட்டத்திற்கு தங்களிட மிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளவேண்டும். இது தொடர்பாக உதவி மைய தொலைபேசி எண்.0427-2415784 மற்றும் 7338721707 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்