search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannabis sales"

    • மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142- 284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம்.

    கடலூர்:

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் மது கடத்தல் மற்றும் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மது கடத்தல், மது விற்பனை மற்றும் கள் விற்பனை செய்பவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போலி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல்களை காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142- 284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல்கள் தெரிவிக்கலாம். இந்த புகார் எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடலூர் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை ஆகி வருவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் அறிவுறுத்தி உள்ளார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் தீவிர சோதனை பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடலூர் கூத்தப்பாக்கம், திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம், கம்மியம் பேட்டை பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சோதனையில் ஈடுபட்டபோது தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனையானது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடலூர் எம். புதூர் சேர்ந்த ஏழுமலை (வயது 36), கடலூர் திருப்பாதிரிப்புலியூர் நவநீதம் நகர் தீனா என்கின்ற தினகரன் (20) கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மூர்த்தி (19) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • திண்டிவனம் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது.
    • விதிமீறல் களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, அந்நிய மதுபானகள்,போதை மாத்திரைகள், ஆகியவை விற்பதாக வெளியான தகவலின் பெயரில் விற்பனையை தடுக்கும் பொருட்டு திண்டிவனம் ஏ.எஸ்.பி அபிஷக் குப்தா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் பெயரில் நேற்று இரவு திண்டிவனம் மரக்காணம் சாலையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, காவர்கள், அன்பு வேல், வரதராஜ், சுந்தர். மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் ஏதேனும் கஞ்சா, மதுபானம், போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருக்கிறார்களா? என அவர்களிடமும், வாகனத்திலும் சோதனை மேற்கொண்டனர். விதிமீறல் களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

    ஆந்திராவிலிருந்து நாகைக்கு தனியார் ஆம்புலன்சில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா மூட்டையை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    ஆந்திராவிலிருந்து நாகைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தஞ்சை மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் ஜெயசந்திரன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, ஏட்டுகள் இளையராஜா, சுந்தர்ராமன், விஜய், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் இன்று காலை நாகை மாவட்டம் அரசு மருத்துவமனை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஆந்திராவிலிருந்து வந்த தனியார் ஆம்புலன்சை நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் முன்னுக்குப் பின் முரணான தகவலை ஓட்டுனர் கூறியதால் ஆம்புலன்சை சோதனையிட்டனர்.

    அப்போது 5 மூட்டைகளில் சுமார் 200 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மேலும் விசாரணை நடத்தியதில் ஆந்திராவிலிருந்து நாகைக்கு கஞ்சாவை கடத்தி வந்து பின்னர் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்க இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தஞ்சாவூர் சரக தனிப்படையினர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மார்சல் டெரன்ஸ் ராஜா என்பவரை கைது செய்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா மூட்டைகள் மற்றும் ஆம்புலன்சையும் பறிமுதல் செய்தனர். 


    சென்னை டி.பி. சத்திரம் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சைவை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன இந்நிலையில் நேற்று இரவு பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், ஏட்டு மதியழகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஆட்டோவை சோதனை செய்தனர். அதில்கஞ்சா மறைத்து வைத்து விற்றது தெரிந்தது.

    இதையடுத்து ஆட்டோவில் இருந்த ஐசிஎப் பகுதியைச் சேர்ந்த பாலு, டிபி சத்திரம் சேட்டு என்கிற மனோகர், ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பா என்கிற ஞானசேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1கிலோ 100கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை போலிசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
    ×