என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » cash flush
நீங்கள் தேடியது "cash flush"
- நீலிகோணாம்பாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக காத்திருந்தார்.
- கத்திமுனையில் பணம் பறித்து சென்றது நீலிகோணா ம்பாளையம் தச்சன் தோட்டம் கிழக்கு வீதியை சேர்ந்த மோகனசுந்தரம் (23) என்பது தெரியவந்தது.
கோவை:
கோவை சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகரன் (வயது 38). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று நீலிகோணாம்பாளையம் அருகே பஸ் நிறுத்தத்தில் சவாரிக்காக காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுதாகரனிடம் பணம் கேட்டு மிரட்டினார். பின்னர் திடீரென அவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.350-யை பறித்து கொண்டு தப்பினார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கத்திமுனையில் பணம் பறித்து சென்றது நீலிகோணா ம்பாளையம் தச்சன் தோட்டம் கிழக்கு வீதியை சேர்ந்த மோகனசுந்தரம் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருச்சி உறையூரில் கடையில் இருந்த தொழிலதிபரிடம் மர்ம நபர் ஒருவர் அவரின் சட்ட பையில் இருந்த ரூ. 23 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டார்.
திருச்சி:
திருச்சி உறையூர் விவேகானந்தர்நகர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் அசோக்குமார் (45), உறையூர் பாண்டமங்கலத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம் போல் கடையில் இருந்துள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென அவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரின் சட்டை பையில் இருந்த ரூ.23 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.
இது குறித்து அவர் திருச்சி உறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X