search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "catchment area"

    • மாயாற்றில் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் இருந்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் தண்ணீர் மாயாறு, தெங்கு மரகடா வழியாக பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் மாயாறு வனப்பகுதிகளில் யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வரு கிறது. மேலும் மாயாற்றில் ஒரு சில பகுதிகளில் முதலை கள் இருப்பதாகவும் கூற ப்படுகிறது.

    மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இதில் பவானிசாகர் வனச்சரக த்திற்கு உட்பட்ட தெங்குமரகடா பகுதியில் பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதியான மாயாற்றை கடந்து தான் கள்ளம்பாளையம் தெங்குமரகடா உள்ளிட்ட கிராமங்களுக்கு பரிசலில் செல்ல முடியும்.

    இந்நிலையில் கள்ளம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கும் போது அங்கு பெரிய முதலை ஒன்று படுத்து இருப்பதை கண்ட னர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களது செல்போனில் ஆபத்தை உணராமல் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அங்கு சுற்றி கொண்டு இருந்த முதலை சிறிது நேரத்துக்கு பிறகு மாயாற்றில் இறங்கி சென்றது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது,

    மாயாற்றில் ஒரு சில இடங்களில் முதலைகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது மாயாற்றில் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    எனவே கள்ளம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மாயாற்றை கடந்து செல்லும் போது மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும்.

    மேலும் தெங்கு மரகடா மற்றும் கள்ளம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆற்றை கடக்க வேண்டும்.

    மேலும் குளிக்கும் போது அதிக கவனத்துடன் குளிக்க வேண்டும். மேலும் ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் பெரியாறு அணைக்கு நீர் வரத்து வந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    தமிழகத்தில் சுட்டெரித்து வந்த கோடை வெயிலால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். சித்திரை மாதம் பிறந்த பிறகு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்த காரணத்தால் மழை வருமா? என்று ஏங்கித் தவித்தனர்.

    பகலில் வெளியில் நடமாட முடியாத நிலையில் தவித்த மக்களுக்கு இரவு நேரங்களில் வீசிய அதிவேக காற்று மட்டுமே ஆறுதலாக இருந்தது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் பெய்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 112.10 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாமல் இருந்த அணையில் தற்போது 100 கன அடி வரை தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1,247 மில்லியன் கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர் மட்டம் 38.48 அடி. வரத்து இல்லாத நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 33.55 அடி. வரத்து 24 கன அடி. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 84.42 அடி வரத்து 9 கன அடி. திறப்பு 3 கன அடி.

    தேக்கடி 7.6, கூடலூர் 10.6, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 15.4, வீரபாண்டி 32, வைகை அணை 7.2, மஞ்சளாறு 58, சோத்துப்பாறை 11, கொடைக்கானல் 62.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது

    கோடை மழை தொடங்கியதால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வந்த வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது. மேலும் சில நாட்கள் மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×