search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் முதலைகள் நடமாட்டம்
    X

    பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதியில் முதலைகள் நடமாட்டம்

    • மாயாற்றில் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    • ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்டம் இருந்து வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரும் தண்ணீர் மாயாறு, தெங்கு மரகடா வழியாக பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இந்த நிலையில் மாயாறு வனப்பகுதிகளில் யானை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வரு கிறது. மேலும் மாயாற்றில் ஒரு சில பகுதிகளில் முதலை கள் இருப்பதாகவும் கூற ப்படுகிறது.

    மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இதில் பவானிசாகர் வனச்சரக த்திற்கு உட்பட்ட தெங்குமரகடா பகுதியில் பவானி சாகர் அணை நீர் பிடிப்பு பகுதியான மாயாற்றை கடந்து தான் கள்ளம்பாளையம் தெங்குமரகடா உள்ளிட்ட கிராமங்களுக்கு பரிசலில் செல்ல முடியும்.

    இந்நிலையில் கள்ளம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கும் போது அங்கு பெரிய முதலை ஒன்று படுத்து இருப்பதை கண்ட னர்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் தங்களது செல்போனில் ஆபத்தை உணராமல் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அங்கு சுற்றி கொண்டு இருந்த முதலை சிறிது நேரத்துக்கு பிறகு மாயாற்றில் இறங்கி சென்றது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது,

    மாயாற்றில் ஒரு சில இடங்களில் முதலைகள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. தற்போது மாயாற்றில் முதலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    எனவே கள்ளம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் மாயாற்றை கடந்து செல்லும் போது மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும்.

    மேலும் தெங்கு மரகடா மற்றும் கள்ளம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆற்றை கடக்க வேண்டும்.

    மேலும் குளிக்கும் போது அதிக கவனத்துடன் குளிக்க வேண்டும். மேலும் ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×