search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chariot racing"

    • போக்குவரத்துக்கு இடையூறாக நடத்தப்பட்டதால் நடவடிக்கை
    • போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரமாக கண்காணித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் குதிரை வண்டிகளை வைத்து ஓட்ட பந்தயம் நடத்துகின்றனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு ள்ளாவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.

    அதன்படி போலீசார் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போக்குவரத்துக்கு இடையூறாக குதிரை பந்தயம் நடந்தது.

    இதனை பார்த்த போலீசார் உடனே அந்த குதிரை வண்டியை விரட்டி பிடித்தனர்.

    மேலும் பந்தயம் நடத்திய வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த பிரேம் (வயது 23) என்ற இளைஞரை வாணியம்பாடி தாலுகா போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து குதிரை வண்டியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தேசிய நெடுஞ்சாலைகளில் குதிரை பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
    • திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    சித்தூர்:

    காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

    சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவிலில் 21 நாள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

    அதன் பிறகு தேரோட்டம் நடந்தது. கோவிலின் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பூஜைகள் செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். திரளான பக்தா்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    கோவிலின் மாடவீதிகளில் திரண்டிருந்த திரளான பக்தர்கள் வெள்ளத்தில் தேர் பவனி வந்தது. தேரில் எழுந்தருளிய உற்சவர் வரசித்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேருக்கு முன்னால் கலை குழுவைச் சேர்ந்த பெண்கள் கோலாட்டம் ஆடினர்.

    தேரோட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

    ×