search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cheeting"

    • நடராஜன் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பீளமேடு,

    கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்தவர் நடராஜன் (வயது 57). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன். அதன் பின்னர் காய்கறி கடை அமைத்து மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். அப்போது சாகர் சிபேட், அமுபா அமித் குமார், கணேஷ் என்பவர்கள் அறிமுகமானார்கள்.

    அவர்கள் மகாராஷ்டிரா ஹமத் நகர் பகுதியில் வெங்காய மொத்த வியாபாரம் செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 50 டன் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிவு செய்தேன்.

    அதற்காக சாகர் சிபேட் ரூ. 4,50,000-யை அமுபா அமித் குமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கூறினார். நானு ம் அந்த பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதன் பின்னர் அவர்கள் இதுவரை வெங்க ாயத்தை அனுப்பி வைக்க வில்லை.

    அவர் களிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில்களை கூறி வருகின் றனர். அப்போ துதான் அவர்கள் என்னை ஏமாற்றி வருவது தெரிய வந்தது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து பீளமேடு போலீசார் ராணுவ வீரரிடம் மோசடியில் ஈடுபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்
    • மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது என தெரிவித்தார்.

    கோவை 

    கோவை ஜோதிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (வயது 30). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் ரத்தினபுரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். அப்போது ஜெய்கணேஷ் என்பவர் வந்து அறிமுகமானார். அவர் என்னிடம் பிரதம மந்திரி யோஜன திட்டத்திற்காக வந்துள்ளேன் இங்கு எனக்கு அலுவலம் உள்ளது என்றார்.

    மேலும் அவருக்கு அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன் மத்திய கோ-ஆப்ரட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ. 5 லட்சம் செலுத்தினால் வேலை வாங்கிவிடலாம் என்றார்.

    இதனை நான் உண்மை என நினைத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 5 லட்சத்தை கொடுத்தேன். அதன்பின்னர் அவர் வேலையில் சேருவதற்காக ஆடரை கொரியர் மூலம் அனுப்பி வைத்தார். அந்த ஆடரை பார்த்தபோது அது போலி என்பது தெரியவந்தது.உடனே நான் அவரது அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால் அவர் அங்கு இல்லை. போன் செய்த போது அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை.


    அப்போது தான் அவர் என்னை ஏமாற்றியது தெரியவந்தது. எனவே என்னிடம் வங்கியில் வேலை வாங்கி வருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த ஜெய்கணேஷ் என்பரை கண்டு படித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2019-ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் எனக்கு அறிமுகமானார்.
    • அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ராஜேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை பூசாரிப்பாளையம் நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 60). ஆட்டோ டிரைவர். இவர் செல்வபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது மகள் பட்டப்படிப்பு படித்து விட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். மேலும் வேலை கிடைப்பதற்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறினார்.

    இதனை உண்மை என நம்பிய நான் அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.2 லட்சம் பணத்தை ராஜேஷ்குமாரிடம் கொடுத்தேன். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அவர் கூறியபடி எனது மகளுக்கு வேலை வாங்கி கொடுக்க வில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை.

    ராேஜஷ்குமார் வேலை வாங்கி தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவ வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ராஜேஷ்குமாரை தேடி வருகிறார்கள். 

    • ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் சுமார் 186 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ளனர்.
    • கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது

    கோவை:

    கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பிளக்ஸ் பேனர் அமைத்தும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது சிங்கப்பூரில் பிரபல கம்பெனிக்கு மாதம் ரூ. 3 லட்சம் சம்பளத்தில் வேலை இருப்பதாகவும், சிவில் என்ஜினீயர், சூப்பர்வைசர், பிட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் வடவள்ளி ஏஜென்சி அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்த போது விசா, பயண கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனை நம்பி ஆண்கள், பெண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அவர்கள் சொன்ன வேலைக்கு தகுந்தவாறு ரூ. 1 லட்சம், 1.5 லட்சம், 2 லட்சங்கள் என ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் பணம் செலுத்தினர். பின்னர் எங்களது செல்போன் எண்ணுக்கு சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை தயாராகிவிட்டது என போலியாக குறுந்தகவல் அனுப்பியுள்ளனர்.

    இது தொடர்பாக ஏஜென்சி நிறுவனத்தை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. நேரில் சென்று பார்த்தபோது அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவானது தெரியவந்தது.

    ஏஜென்சி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் சுமார் 186 பேரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ளனர். எனவே வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

    • ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தெரிகிறது
    • கிட்னி தானமாக பெற்றுகொள்வதாக பணம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை:

    கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். கூலி வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவரும், குழந்தைகளும் உள்ளனர். இவர் குடும்ப வறுமை காரணமாக கஷ்டப்பட்டு வந்தார்.

    அப்போது அவரிடம் உறவினர் ஒருவர் பெங்களூரில் உள்ள ஆஸ்பத்தரியில் ஒரு கிட்னியை ரூ. 6.2 கோடிக்கு பெற்று கொள்வதாக கூறியதாகவும், அந்த டாக்டரை அறிமுகப்படுத்தி வைத்ததாகவும் தெரிகிறது.

    இந்நிலையில், அந்த பெண் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டரை சந்தித்துள்ளார். அப்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் பணியாற்றும் பெங்களூரை சேர்ந்த டாக்டர் தாமஸ் அரோன் பெனா (45) என்பவர் ரூ.6.2 கோடிக்கு உங்களது சிறுநீரகத்தை பெற்று கொள்கிறோம்.

    ஆனால் அறுவை சிகிச்சை கட்டணமான ரூ. 4 லட்சத்து 14ஆயிரத்து 269-யை முன்கூட்டியே கட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்பின்னர் நீங்கள் கட்டிய பணத்துடன் ரூ.6.2 கோடி உங்களுக்கு கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் தனது குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு கிட்னியை தானமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்.

    இதனை அவர் குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதன்பிறகு தனக்கு தெரிந்தவர்களிடம் பணத்தை கடனாக திரட்டி டாக்டரின் வங்கி கணக்கில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,14,269யை செலுத்தி உள்ளார். இந்த தகவல் எப்படியோ அந்த பெண்ணின் குடும்ப த்தினருக்கு தெரியவந்தது.

    உடனே அவர்கள் கிட்னி தானமாக கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த துடன், கொடுத்த பணத்தை திருப்பி வாங்குமாறு தெரிவி த்துள்ளனர். பின்னர் தனது முடிவை மாற்றிகொண்ட அந்த பெண் தான் கொடுக்க பணத்தை திருப்பி கேட்டபோது டாக்டர் தாமஸ் அரோன் பெனா கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இது குறித்து ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிட்னி தானமாக பெற்றுகொள்வதாக பணம் மோசடி நடைபெற்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார்(38) என்பவர் கடந்த 18-ந் தேதி மோகன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது42). பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தொழில் ரீதியாக பழக்கமான அசோக்குமார்(38) என்பவர் கடந்த 18-ந் தேதி மோகன்ராஜை செல்போனில் தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர், நான் ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் நகை அடகு வைத்துள்ளேன். அதனை மீட்டெடுப்பதற்கு ரூ.1 லட்சம் குறைவாக உள்ளது. அதனை கொடுத்தால் நகையை மீட்டு பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என தெரிவித்தார்.

    இதனை நம்பிய மோகன்ராஜ் அசோக்குமாரிடம் ரூ. 1 லட்சம் கொடுத்து உள்ளார். அதன்பின்னர் அசோக்கு மாரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அசோக்குமார் ரூ.1 லட்சத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்ராஜ் இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட அசோக்குமாரை தேடி வருகின்றனர்.

    முன்னதாக காந்திபுரத்தை சேர்ந்த பழனிவேல் என்ற நகை வியாபாரியிடம் ரூ. 3.5 லட்சம், ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்த மணிகண்டன் (40) என்ற நகை வியாபாரியிடம் ரூ.3 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அசோக்குமார் மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    3 பேரிடமும் தொழில் ரீதியான பழக்கத்தில் ஒரே மாதிரி பேசி ரூ.7.5 லட்சத்தை அசோக்குமார் நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் பலரிடமும் இது போல் மோசடி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ×